• Home
  • அரசியல்
  • பிரிட்டனில் வன்முறைப் போராட்டம் எதற்காக?

பிரிட்டனில் வன்முறைப் போராட்டம் எதற்காக?

Image

பதட்டத்தில் இந்தியர்கள்

பிரிட்டனுக்குச் செல்லும் இந்தியர்கள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் என்று இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கும் நிலையில், இங்கிலாந்தில் குடியிருக்கும் அத்தனை இந்தியர்களும் கலங்கிப் போயிருக்கிறார்கள்.

என்னதான் நடக்கிறது இங்கிலாந்தில்..?

அடைக்கலம் தேடி வருபவர்கள் இங்கிலாந்தின் வளத்தைச் சுரண்டுவதாக இங்கிலாந்து மக்கள் நீண்ட நாட்களாகப் போராடி வருகிறார்கள். இந்த நிலையில், ஒரு பொய் செய்தியால் நாடு முழுக்க போராட்டம் தீவிரம் அடைகிறது. இது இஸ்லாமியர்களுக்கு எதிரான போராட்டமாக மாறிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இங்கிலாந்தில் முஸ்லீம் அகதி ஒருவர் 3 சிறுவர்களை குத்தி கொலை செய்ததாக பரப்பப்பட்ட பொய் செய்தியால் நாடு முழுவதும் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இசுலாமியர் மற்றும் வெளிநாட்டு குடிமக்களுக்கு எதிரான வன்முறை தீவுரமடைந்திருக்கிறது. அடைக்கலம் தேடுபவர்களின் விடுதிகளின் கதவுகள் வெளியே தாளிடப்பட்டு தீ பற்ற வைக்கப்படுகிறது. கடைகள் சூறையாடப்படுகின்றன.

கடந்த வாரம் இங்கிலாந்தின் வடமேற்கு கடற்கரையில் உள்ள சவுத்போர்ட்டில் டெய்லர் ஸ்விப்ட் இன் இசை நிகச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் மர்ம நபர் ஒருவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்கள் மீது கத்தியால் தாக்குதல் நடந்த துவங்கினார். அந்த தாக்குதலில் 6, 7 மற்றும் 9 வயதுடைய மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

அந்த தாக்குதலை நடத்தியது 17 வயதான ஆக்செல் ருடகுபனா என்ற இங்கிலாந்து குடிமகன் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் ஒரு முஸ்லீம் அகதி என தீவிர வலதுசாரிகள் பொய் செய்தியை பரப்பினர். இங்கிலாந்தில் பல ஆண்டுகளாக அகதிகள், முஸ்லீம்களுக்கு எதிராக தீவிர வலதுசாரிகள் இனவெறி வெறுப்புப் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த பிரதமர் தேர்தலில் கூட அகதிகள் குறித்து வெறுப்புப் பிரச்சாரங்களும், அவர்களை நாடு கடத்துவது பற்றியும் முக்கிய விவாதமாக பேசப்பட்டது. இந்நிலையில் இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற கொலைகளை வைத்து போலிச் செய்திகளை பரப்பியதை தொடர்ந்து நாடு முழுவதும் கலவரம் வெடித்துள்ளது.

நூற்றுக்கணக்கான கலவரக்காரர்கள் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள ஹோட்டல் ஒன்றை தாக்கி அடித்து உடைத்தனர். இந்த கலவரம் லிவர்பூல், மான்செஸ்டர், பிரிஸ்டல், பிளாக்பூல் மற்றும் ஹல் என நாட்டின் பிரதான நகரங்களில் இந்த கலவரம் பரவியுள்ளது. முஸ்லீம்கள், அகதிகளுக்கு எதிரான வெறுப்பு கோஷங்கள் எழுப்புவது, அவர்களது உடைமையின் மீது தாக்குதல் நடத்தி சேதத்தை உருவாக்குவது என கலவரக்காரர்கள் காவல்துறையினரை மீறி செயல்பட்டு வருகின்றனர்.

பொய் செய்தியால் பரவிய கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. அதேநேரம், அகதிகளாக வேறு நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கட்டுப்படுத்தும் வகையில், இந்த போராட்டத்துக்கு அரசு ஆதரவளிப்பதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.

Leave a Comment