பாலியல் பெண்ணுக்கு என்ன தண்டனை..?

அவமானம் என்று எதுவுமில்லை

உடலை விற்பனை செய்யும் பாலியல் பெண் தொழிலாளர்களுக்கு இந்த உலகில் யாருமே ரெஸ்பெக்ட் கொடுப்பதில்லை. அவர்களை அவமானமாகவும் அருவருப்பாகவும் பார்க்கிறார்கள்.

ஒரு உண்மை தெரியுமா..? உலகில் எந்த ஒரு பெண்ணும் பாலியல் தொழில் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இந்த தொழிலில் இறங்குவதில்லை. ஆண்களால் ஏமாற்றப்பட்டவர்கள், ஆண்களால் கைவிடப்பட்டவர்கள், ஆண்களால் கொடூரமாக சிதைக்கப்பட்டவர்களே பாலியல் தொழிலாளியாக மாறுகிறார்கள்.

காமத்துக்கும் பணத்துக்கும் அலையும் ஆண்களே பாலியல் பெண்களை உருவாக்குகிறார்கள். பாலியல் தொழிலுக்குப் பெண்களை விற்பனை செய்வதும் வாங்குவதும் இன்றும் உலகம் முழுவதும் நடக்கிறது. இதற்கு மனிதகுலம் வெட்கப்பட வேண்டும்.

ஏழ்மை, ஆதரவின்மையால் பல பெண்கள் இந்த தொழிலில் தள்ளப்படுகிறார்கள். எனவே, பாலியல் தொழிலாளிக்கு தண்டனை என்பது பாதிக்கப்பட்ட நபரின் கண்களை குத்துவதற்கு சமம். தண்டனை என்றால் அவர்களை உருவாக்கும் ஆண்களுக்கே தர வேண்டும்.

மனைவியை கட்டிலில் வெற்றி அடைய முடியாத ஆண்களே பாலியல் பெண்களைத் தேடி வருகிறார்கள். காமத்தில் தோல்வி கண்ட ஆண்களே வெவ்வேறு பெண்களிடம் இன்பம் தேடி அலைகிறார்கள். ஆண்கள் தங்கள் மனதுக்குள் ஒளிந்திருக்கும் பாலியல் குரூரத்தை இவர்களிடம் தணித்துக்கொள்கிறார்கள்.  

எல்லா அழுக்குகளையும் தாங்கிக்கொண்டு ஓடும் நதியைப் போன்றே, இந்த சமூகத்தில் பாலியல் பெண்கள் இருக்கிறார்கள். வேறு தொழில் செய்து பிழைக்கத் தெரியாமல் உள்ளனர். இந்த தொழிலில் இருந்து தப்பிக்க முயன்றால் கொலை மிரட்டல், வன்முறை, குடும்பத்துக்கு ஆபத்து வரலாம் என்பதாலும் பலர் வெளியேறுவதில்லை. பாலியல் பின்னணியுடன் பெண்கள் சமூகத்தில் நிம்மதியாக வாழ முடியாது என்பதாலே இந்த தொழிலில் இருந்து வெளியேறாமல் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள்.  

பாலியல் பெண்கள் இல்லாத சமூகமே நாகரிக சமூகம். அப்படியொரு நிலை விரைவில் வரும் என்று நம்புவோம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment