ஞானகுரு பதில்கள்
கேள்வி : ஒரு மனிதர் நிம்மதியாக வாழ்வதற்கு முக்கியமான அடிப்படைத் தகுதிகள் என்று எதைச் சொல்வீர்கள்..?
- ஜே.லலிதா, திருக்கடையூர்.
ஞானகுரு ;
ஒரே ஒரு முக்கியமான தகுதி என்றால் அது ஆரோக்கியம் மட்டுமே. ஆரோக்கியம் இல்லாத மனிதரிடம் கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் பயன் இல்லை. எக்கச்சக்க செல்வாக்கினால் எதுவும் ஆகப்போவதில்லை. புகழ் இருந்தாலும் பிரயோஜனம் இல்லை.
எனவே, ஆரோக்கியத்தில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். இதையடுத்து அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதலான உறவுகளைத் தேடுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
