• Home
  • யாக்கை
  • முட்டைகோஸ்க்கும் யூரிக் அமிலத்துக்கும் என்ன தொடர்பு..?

முட்டைகோஸ்க்கும் யூரிக் அமிலத்துக்கும் என்ன தொடர்பு..?

Image

உடலில் உற்பத்தியாகும் யூரிக் அமிலம் ரத்தத்துடன் கலந்து, பின்னர் சிறுநீரகங்களால் வடிகட்டப்பட்டு சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது. யூரிக் அமிலம் அதிகம் உற்பத்தியானாலும், உடல் அதை போதிய அளவில் அகற்றாவிட்டாலும் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பதை ஹைப்பர்யூரிசிமியா என்கிறார்கள்.

உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் பாதம், முழங்காலில் வலி, வீக்கம், விறைப்பு, கீல்வாதம் ஏற்படும். நாட்பட்ட நிலையில் நீரிழிவு மற்றும் சிறுநீரகக் கற்கள், சிறுநீரகப் பிரச்னைகள், உயர் ரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கிறது. சிறுநீர் அல்லது ரத்தத்தை பரிசோதனை செய்வதன் மூலம் உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அறிய முடியும். பெண்களுக்கு 1.5 – 6 மி.கி./டி.எல். அளவும் ஆண்களுக்கு 2.5 – 7 மி.கி./டி.எல். அளவும் யூரிக் அமிலம் இருக்கலாம்.

உணவு மூலமே யூரிக் அமிலம் உடலுக்குக் கிடைக்கிறது என்பதால் உணவுக் கட்டுப்பாடு மருந்தை விட முக்கியமாகிறது. குறிப்பாக சிவப்பு இறைச்சி மற்றும் உள்ளுறுப்புகளான கல்லீரல், சிறுநீரகம் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தயிரில் உள்ள புரதம் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் என்பதால் குறைக்க வேண்டும். பழச்சாறு, குளிர் பானங்கள், மது, அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.

சைவ உணவுகளில் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் ஆகியவற்றில் பியூரின் அளவு மிகவும் அதிகம். எனவே, யூரிக் அமிலம் அதிகரித்துவிட்டால், இந்த உணவுகளை முழுமையாக தவிர்ப்பது நல்லது. நார்ச்சத்து நிரம்பிய உணவுகளும் ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களும் எடுத்துக்கொள்ளலாம்.

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்