பிள்ளைகளுக்கு அதீத பாசம் என்னாகும்..?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : குழந்தைகளுக்கு இன்று பெற்றோர்கள் அதிக அன்பும் பாசமும் கொடுக்கிறார்கள். இது சரிதானா..?

  • ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.

ஞானகுரு :

மனிதகுலம் இதுவரை கொடுக்காத அளவுக்கு இந்த யுகப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதிக கவனிப்பும் அன்பும் கொடுக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆனால், இது போதாது என்று பிள்ளைகள் போர்க்கொடி எழுப்புகிறார்கள். அதேநேரம், இது சரியான பராமரிப்பா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. தங்கக் கூண்டுக்குள் அடைத்துவைப்பதை பெருமை என்று பெற்றோர் நினைக்கிறார்கள். அதனாலே பிள்ளைகள் பறக்கத் துடிக்கிறார்கள்.

பிள்ளைகள் எதிர்பார்ப்பது அன்பும் பாசமும் அல்ல, சுதந்திரம். அந்த சுதந்திரத்தை எந்த பெற்றோரும் தருவது இல்லை. ஆகவே, பெற்றோருக்கும் பிள்ளைக்கும் மோதல் முற்றிக்கொண்டே போகிறது. ஒரு வகையில் முடிவே இல்லாத போராட்டம் இது.

கேள்வி  : இன்று நியாயவாதிகள் தோல்வியை சந்திப்பது ஏன்..?

  • எஸ்.ராமலட்சுமி, காந்திநகர்.

ஞானகுரு :

நல்லவர்கள், நியாயவான்கள் என்றால் அவர்களுக்கு தோல்வி கிடைக்காதா அல்லது கிடைக்கக்கூடாதா..? வெற்றியைப் போலவே தோல்வி என்பதையும் துன்பம் என்பதையும் எல்லோரும் ருசிக்கத்தான் வேண்டியிருக்கும். நியாயவாதிகளுக்கு இந்த உண்மை நிச்சயம் புரியும்.

Leave a Comment