சர்க்கரை நோயாளிக்கு செக்ஸ் ஆர்வம் என்னாகும்..?

Image

டாக்டர் நாராயணரெட்டி

இந்திய அளவில்  உள்ள செக்ஸுலஜிஸ்ட்  மருத்துவர் நிபுணர்களில் மிக முக்கியமானவர் பிரபல மருத்துவர் டாக்டர் நாராயணரெட்டி அவருடன் ஓர் உரையாடல்….

பாலியல் அறிவுள்ளவர்களாக இன்றைய மக்கள் இருக்கிறார்களா?

’’ஒரு மனிதனின் நடவடிக்கைகள் மூன்று விஷயங்களைப் பொருத்து அமைகின்றன. 1. அவனுக்குக் கிடைக்கிற தகவல்கள். 2. தகவல் அடிப்படையில் அவன் வைக்கிற நம்பிக்கை. 3. நம்பிக்கை காரணமாக அவனிடம் ஏற்படும் செயல்மாற்றங்கள். இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. இந்த விதி  மனிதனின் செக்ஸ் நடவடிக்கைகளுக்கும் பொருந்தும்.

பாலியல் பற்றிய அறியாமை பாமரர்களிடம் மட்டும்தான் என்றில்லை. படித்தவர்களிடமும்கூட  இருப்பது துரதிர்ஷ்டமானது. சரியாக புரிந்து கொள்ளுதல் இல்லாத காரணத்தாலேயே பலரது தாம்பத்ய வாழ்வில் குழப்பங்களும், சச்சரவுகளும் ஏற்பட்டு குடும்பத்திற்குள்ளேயே சூறாவளிகள் வீசுகின்றன. இதனால் உற்சாகமற்ற வகையில் பலர் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். 

சொல்லப்போனால்… மலர்வனமாகத் தழைக்க வேண்டிய வாழ்க்கையை, முள் காடாக மாற்றிக்கொண்டு விரக்தியில் வாழ்கிறார்கள். முழு பாலியல் அறிவு பெற்றவர்கள் எல்லோரையும் சொல்லிவிட முடியாது.’’

செக்ஸ் தெரபி என்றால் என்ன?

’’செக்ஸ் தெரபி என்கிற வார்த்தையைக் கேட்டாலே பாம்பை மிதித்தது போல சிலர் பயப்படுகிறார்கள். பிஸியோதெரபி போன்ற தெரபிகளை பற்றி எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். செக்ஸ் தெரபி மட்டும் அதிகம் பேசப்படாத, பிரபலமாகாத ஒன்றாகவே இருக்கிறது. செக்ஸ் குறைகளை நீக்கவும் குறைகள் ஏற்படுவதை முன் எச்சரிக்கையாக தடுக்கவும் உண்டான சிகிச்சை முறையே தெரபி எனப்படும்.

சிகிச்சை முறையில் மருந்து உபயோகிக்கும்போது அது ’ட்ரக் தெரபி’ எனவும் உடற்பயிற்சி களை சம்பந்தப்படுத்தி செய்யும்போது ’பிஸியோதெரபி’ எனவும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என மனிதன் பழக சொல்லித் தருவது ’பிஹேவியரல் தெரபி’ எனவும் சொல்லப்படுகிறது. உடல் ரீதியாக அல்லாமல் மனரீதியாக கோளாறு ஏற்பட்டு உடல்உறவில் குறைகள் நிகழும்போது அதை சரிசெய்ய குறிப்பிட்ட செக்ஸ் வழிமுறைகளையும் காம உணர்வு உந்துதல் வழிமுறைகளையும் சொல்வதுதான் செக்ஸ் தெரபி.’’

சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு செக்ஸில் ஆர்வம் குறையுமா?

’’ஒரு ஆணுக்கு விறைப்புத்தன்மை வராமல் இருந்தால் அதற்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில காரணங்கள் இருக்கலாம். உடம்பு ரீதியாக இருக்கும் காரணங்களில் மிக முக்கியமானது சர்க்கரை வியாதி. இது ஒரு நோயல்ல. உடலில் உள்ள Pancreas க்ளாண்டின் வேலை தடைபடுவதாலும், பொதுவாக பரம்பரையாகவும் வருவது. சர்க்கரை வியாதி வந்த உடனேயே அதைக் கண்டுபிடித்து மருந்துகளுடன், டயட் கன்ட்ரோல் மற்றும் உடற்பயிற்சி செய்து குறைப்பது நல்லது. 

கன்ட்ரோல் இல்லாத சர்க்கரை வியாதியினால் உடம்பில் பல அவயவங்கள் பழுதடைய வாய்ப்பு இருந்தாலும் அதிகம் பாதிக்கப்படுவது கண், கிட்னி, ஆண்குறி, பாதங்கள்தான். ஆனால் செக்ஸ் ஆர்வம் குறையும் என்று சொல்ல முடியாது.

சர்க்கரை வியாதிக்காரர்கள் எல்லோருக்கும் விறைப்புத்தன்மை இருக்காது என்பதல்ல. விறைப்புத்தன்மை இல்லாமல் போவதற்கான பல காரணங்களில் சர்க்கரை நோயும் ஒன்று.

கணவன்  வேறொரு பெண்ணையும், மனைவி  வேறொரு ஆணையும் நாடுவது நம்நாட்டில் அதிகரித்து வருகிறதே?

’’ ‘ஒருவனுக்கு ஒருத்தி’ இது தமிழர் பண்பாடு. இதைப் பின்பற்றித்தான் கணவன் – மனைவி நடந்துகொள்ள வேண்டும். செக்ஸ் குறைகள் இருந்தால் மனம்விட்டுப் பேசி மருத்துவர் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு ஆளை மாற்றுவது நல்லதல்ல. பலவித பின்விளைவுகள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்படும். வாழ்க்கையில் மற்ற விஷயங்கள் போல செக்ஸும் ஒரு ரொடீனான ஒன்றாக மாறிவிட்டது. ஒரே மாதிரி, ஒரே இடத்தில் வழக்கமான ஒன்றாக ஈடுபடும்போது சலிப்பு தட்டிவிடுகிறது. இதற்கு பெயர் Sexual Boredam.

அமெரிக்காவில் 1966-Ruben என்கின்ற ஆராய்ச்சியாளர் செய்த செக்ஸ் ஆராய்ச்சியில் அவர் கண்டுபிடித்த உண்மை, நூற்றுக்கு அறுபது கணவன்மார்கள் தங்கள் மனைவிகளிடம் மட்டும் தான் ஆண்தனமாக செக்ஸ் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் மற்ற பெண்களிடம் வீரியமாக செயல்படுகிறார்கள். இது அதிர்ச்சியான   புள்ளிவிவரம் என்றாலும், நமது கலாச்சாரத்தில் மனைவி வேறு ஆணைத் தேடி ஓடுவதோ, கணவன் வேறு ஒரு பெண்ணைத் துரத்துவதோ அங்கீகரிக்கப்படாத ஒன்று. சுற்றுப்புற சூழலையும், செக்ஸின் ஆர்வத்தை உண்டுபண்ணிக்கொள்ளும் வழிமுறை களை மாற்றியமைப்பதினாலும் இப்பிரச்னையை வென்று விடலாம்.’’

Leave a Comment