பசி இல்லை என்றால் என்னாகும்..?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : சேவை மனப்பான்மை இன்று குறைந்துவிட்டதா..?

  • பி.நடராஜன், சென்னை.

ஞானகுரு :

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், வங்கிப் பணியாளர்கள், தபால் ஊழியர்கள் என மக்களுடன் நேரடித் தொடர்புள்ளவர்கள் அதுவும் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்பவர்கள் ரொம்பவே சலித்துக்கொண்டு பணியாற்றுவதால் சேவை மனப்பான்மை குறைந்துபோனதாகத் தெரிகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. பேரிடராக பெருவெள்ளம், நிலநடுக்கம் போன்றவை ஏற்படும் தருணங்களில் எல்லா மனிதர்களும் சேவையாளராக மாறிவிடுகிறார்கள். போலீஸ் பிடிக்கிறாங்க என்று சொல்லிக்கொண்டே போகும் வாகனவோட்டிகளும், முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல் பிச்சை போடும் மனிதர்களும் சேவையாளர்களே.

கேள்வி : பசியும் பணமும் இல்லையென்றால் இந்த உலகம் எப்படியிருக்கும்..?

  • ஏ.மணிகண்டன், பாண்டியன் நகர்.

ஞானகுரு :

பசி இல்லையென்றால் மரம் போன்று மனிதர்கள் வளர்ந்துகொண்டிருப்பார்கள். பணம் இல்லையென்றால் விலங்குகள் போன்று உணவைத் தவிர வேறு எதையும் மனிதர்கள் தேட மாட்டார்கள். எப்போதும் போல், உலகம் இவற்றை எல்லாம் சட்டையே செய்யாமல் சுற்றிக்கொண்டே இருக்கும்.

Leave a Comment