ஈரான் ஹிஜாப் போராளிப் பெண்ணுக்கு என்ன ஆனது.?

Image

மீண்டும் ஒரு தற்கொலை

பெண்களின் ஆடையில் தான் இஸ்லாத்தின் கண்ணியமும் கலாச்சாரமும் ஒட்டியிருக்கிறது என்று அடக்கி ஒடுக்குவதையே இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்தக் காலத்திலும் செய்துவருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளம் பெண் காணாமல் போயிருப்பது உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

கடந்த நவம்பர் இரண்டாம் தேதி ஈரானின் புகழ் பெற்ற இஸ்லாமிக் ஆசாத் பல்கலைக் கழகத்தில் அஹூ தர்யேயி எனும் பெண் பாதுகாப்புப் படையினரால் துன்புறுத்தப்பட்டாள். ஈரானின் கடுமையான ஹிஜாப் விதிமுறைகளின்படி தலைக் கவசம் அணியவில்லை என்று சொல்லி அவள் துன்புறுத்தலுக்கு ஆளானதாகத் தெரிகிறது. அதை எதிர்த்து தர்யேயி அறையில் இருந்து வெளியே வந்து தன் மேலாடைகளைக் களைந்து வெறும் உள்ளாடைகளுடன் பல்கலைக் கழக வளாகத்தில் அமர்ந்து கொண்டார். அந்த நிழற்படம் அன்று உலகெங்கும் வைரல் ஆனது.

அந்தப் பெண்ணுக்கு என்ன நடக்குமோ என்று உலகமே கவலையில் ஆழ்ந்தது. எதிர்பார்த்தபடியே உடனடியாக கைதானவர் காணாமல் போய் இன்று வரை எங்கிருக்கிறார் என்ற தகவல் இல்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது கொல்லப்பட்டுவிட்டாரா என்று கவலையில் பெண்ணியவாதிகள் இருக்கும் நிலையில், அந்தப் பெண்ணுக்கு மனநிலை சரியில்லை என்று அவர் குடும்பத்தினர் வாக்குமூலம் கொடுக்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் எதிரொலியாக  தெஹ்ரான் பள்ளி ஒன்றில் அரீசூ கவாரி எனும் 16 வயது மாணவி  ஹிஜாப் சரியாக அணியாமல் சக மாணவிகளுடன் நடனமாடி இருந்தார் என்பதற்காக மிரட்டி கண்டிப்பு காட்டியுள்ளது. கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில்  அந்தப் பெண் வீட்டு மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இதற்கு முன்பு மஹ்சா அமினி எனும் ஒரு பெண்ணின் ஹிஜாப் பிரச்சினையில் பாதுகாப்பு அதிகாரிகள் அவளை அடித்தே கொன்று போட்டதினால் போராட்டம் வெடித்தது. ஆயிரக்கணக்கான பெண்கள் தம் ஹிஜாப்பைக் கழட்டி தெருவில் கொளுத்திப் போட்டார்கள். லட்சக்கணக்கானோர் இன்ஸ்டாகிராமில் ஹிஜாப் கழட்டும் வீடியோவைப் பதிவு செய்தார்கள். அவற்றை அரசு கடுமையாக எதிர்கொண்டது. 500க்கும் மேற்பட்டவர்கள் கொலையுண்டார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் கைதாகி இன்று வரை சிறையில் வாடுகின்றனர்.

இந்த நிலையில் ஒரு பெண் காணாமல் அடிக்கப்பட்டிருக்கிறார். இன்னொரு சிறுமி தற்கொலை செய்திருக்கிறார். இந்த மதவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் அரசுகளும் சட்டங்களும் மனிதர்களை இன்னும் பல நூற்றாண்டு பின்னோக்கி இழுக்கின்றன.

ஒவ்வொரு பெண்ணும் விழிப்பு அடைய வேண்டிய நேரம் இது. அவர்களின் உடையை மதமோ, ஜாதியோ கட்டுப்படுத்தக் கூடாது, அதற்கு பெண்கள் அனுமதிக்கவும் கூடாது.

Leave a Comment