அடேங்கப்பா வித்தியாசங்கள்
இந்திய நாட்டில் நம் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கடவுள் வாழ்த்து மூலம் பள்ளிக்கூடத்தைத் தொடங்குகிறோம். ஆனால், ஜப்பான் நாட்டில் ஆரோக்கியத்திற்கும் நற்குணங்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. குறிப்பாக ஆரம்பப் பள்ளி முதல் ஆறாம் வகுப்பு வரை என்னவெல்லாம் கற்றுத்தருகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.
ஜப்பானில் இடைநிலைப் பள்ளி வரை பரீட்சைகள், தேர்வுகள் எதுவும் இல்லை. இந்த வயதில் மாணவர்கள்க்கு கற்பித்தல், படிப்பித்தல் அல்ல நோக்கம். மாறாக அவர்களிடம் ஆளுமைகளை வளர்த்தல், தார்மீக பண்பாடுகளை ஊக்குவிப்பதை முக்கியமாகக் கருதுகிறார்கள்.
ஜப்பானிய பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் கால் மணி நேரம் ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்வார்கள். இதன் மூலம் சுத்தம் சுகாதாரத்தின் மீது ஆர்வமுள்ள ஒரு ஜப்பானிய தலைமுறை தோன்றுவதற்கு வழிவகுத்தது.
ஜப்பானில் மாணவர்கள் சாப்பிடுவதற்கு முன்பாக ஆசிரியர்கள் சாப்பிட்டு விடுவார்கள். அதாவது உணவின் தரம் சரியாக இருக்கிறதா என்பதை உணவின் பாதுகாப்பை உறுதி செய்து விடுவார்கள். அதேபோன்று பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தங்களுடன் பல் துலக்கும் பிரஷ் எடுத்துச்செல்வார்கள். ஸ்நாக்ஸ், உணவு போன்றவை சாப்பிட்ட பிறகு பல் துலக்குவார்கள், அதன் மூலம் அவர்கள் சிறு வயதிலிருந்தே தங்கள் ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்க கற்றுக்கொள்கிறார்கள்.
ஜப்பானில் வசதியானவர்கள் என்றாலும் வீட்டு வேலைக்கு ஆட்களை நியமிப்பதில்லை. அவரவர் வேலைகளை அவரவர் செய்வதே முக்கியம் என்று கருதுகிறார்கள். ஜப்பானில் துப்புரவுத் தொழிலாளர்கள் சுகாதாரப் பொறியாளர்கள் என்று மதிப்புடன் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் மாதத்திற்கு 5,000 முதல் 8,000 அமெரிக்க டாலர்கள் சம்பளம் பெறுகிறார்கள். துப்பரவுத் தொழிலில் ஒருவர் நியமிக்கப்பட முன்னர், எழுத்து மூலம் மற்றும் வாய்மொழித் தேர்வுகள் உண்டு.
ஜப்பானில் ரயில்களில், உணவகங்களில் மற்றும் பொது இடங்களில் மொபைல் போன்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது, சைலன்ட் நிலையில் மொபைலை வைத்திருப்பதே முக்கியமாகக் கருதப்படுகிறது.
உணவை எந்த ஒரு ஜப்பானியரும் வீணடிப்பதில்லை. உணவகத்திற்குச் சென்றாலும் ஒவ்வொருவரும் அவரவருக்குத் தேவையான உணவை, தேவையான அளவு மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். யாரும் அளவுக்கதிக உணவைத் தட்டில் வைக்க மாட்டார்கள். சின்ன வயதில் இருந்து மாணவர்களுக்கு இந்தப் பழக்கத்தைக் கற்றுக்கொடுப்பதாலே, அவர்கள் காலம் முழுக்க சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்.