• Home
  • அரசியல்
  • உதயநிதியின் F4 ரேஸில் இத்தனை நன்மைகளா..?

உதயநிதியின் F4 ரேஸில் இத்தனை நன்மைகளா..?

Image

அடுத்து எஃப் 3 ரேஸ் நடக்கப் போகுதாம்.

மாபெரும் மழை பெய்து கார் ரேஸ் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் ஆசையாக இருக்கிறது எனும் வகையில், உதயநிதியின் கார் ரேஸ் முயற்சிகளுக்கு கடுமையாக முட்டுக்கட்டை போடப்பட்டு வருகிறது. அதேநேரம், இதனை நடத்தியே தீர்வது என்பதில் உதயநிதி உறுதியாக இருக்கிறார்.

தெற்காசியாவிலேயே முதன்முறையாக ஃபார்முலா கார் ரேஸ் பந்தயத்தில் எந்த குளறுபடியும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக நேற்று இரவு ஆலோசனை நடத்தினார். சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை உதயநிதி நேரில் ஆய்வு செய்தார்.  நடவடிக்கைகள் – பொதுமக்கள் அமர்ந்து பார்க்கின்ற இடம், அமைச்சர்கள் – நீதியரசர்கள் – அதிகாரிகளுக்கான காலரி பார்வையிட்டார்.

அதேநேரம், ஓமந்தூரார் அரசுப் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கான வழிகள் – சிகிச்சையிலிருப்போர் & மருத்துவமனை செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படாத வகையில் நடப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டன.

இந்த நிலையில் கார் ரேஸ் நடத்தினால் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் என்று தி.மு.க.வினர் பட்டியல் வெளியிட்டு வருகிறார்கள்.

தெற்காசியாவில் முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் சென்னையில் இந்த F4கார் ரேஸ் நடக்கிறது. உலக அளவில் இதுவரை மொத்தம் 16 நகரங்களில் மட்டுமே இந்த ரேஸ் நடந்திருக்கிறது. உலக அளவில் night race இதுவரை ஐந்து நகரங்களில் மட்டுமே நடந்திருக்கிறது.

சிங்கப்பூர், மியாமி, லாஸ்வேகாஸ், மொனாகோ, அசர்பைஜான் போன்ற நகரங்களில் மட்டுமே நடந்த ஸ்ட்ரீட் சர்க்யூட் ரேஸ் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் நடப்பது தமிழ்நாட்டிற்கு உலக அரங்கில் பெருமையை தேடித் தரும்.

.F4 கார் ரேசிங்,உலக வரைபடத்தில் தமிழ்நாட்டை முக்கியமான இடத்திற்கு கொண்டு சேர்க்கும்.. அதோடு .ஃபார்முலா Racers தான் உலகத்திலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள். இதில் பல பேர் தனியாக ஜெட் விமானம் வைத்திருக்கின்றனர்… சிங்கப்பூரில் முதன்முறையாக ஃபார்முலா 1 ரேஸ் நடக்கும் பொழுது மொத்த சிங்கப்பூர் மக்களும் கொண்டாடினர். அப்படித் தான் தமிழர்களும் கொண்டாட வேண்டும்.

பார்முலா 1 என்பது ஃபார்முலா ரேஸ்களின் உச்சம்.. சென்னையில் நடைபெறுவது பார்முலா 4 தான்.. ஃபார்முலா 1 இல்லை..பார்முலா 4 எண்ட்ரி லெவல்.. அதுக்கு பிறகு‌ பார்முலா 3, 2 இருக்கு.. அதெல்லாம் தாண்டி பார்முலா 1 ரேஸும் உதயநிதி மூலம் வந்தே தீரும்’’ என்கிறார்கள்.

Leave a Comment