பெண்ணின் பலம், பலவீனம் என்ன..?

ஞானகுரு பதில்கள்

பெண்களின் பலம், பலவீனம் எது..?

  • டி.குணசேகரன், சூலக்கரை

ஞானகுரு :

சகிப்புத்தன்மையே பெண்ணின் பலம். பெற்றோர், கணவன், பிள்ளைகள் செய்யும் அத்தனை தவறுகளையும் சகித்து ஏற்றுக்கொள்கிறாள். இந்த சகிப்புத்தன்மைக்கு அன்பு என்று பெயரிட்டு அழைப்பதுதான், அவளுடைய பலவீனம். இந்த பலவீனத்தையே ஆண்கள் பயன்படுத்தி அவளை ஒரு வேலைக்காரி போல நடத்தி காரியம் சாதித்துக்கொள்கிறார்கள்.

கேள்வி : மரணத்தை வரவேற்கும் தைரியம் யாருக்கு உள்ளது..?

  • ஏ.மதுசூதனன், என்.ஜி.ஓ. காலனி.

ஞானகுரு :

டாக்டர் ஊசி போடுவார் என்ற அச்சப்படும் பிள்ளை பயந்துகொண்டே இருக்கும். மருத்துவமனையைப் பார்த்ததும் அலறும். டாக்டர் ஊசி போடும் வரையிலும் குழந்தையின் கண்ணில் கண்ணீர் மிதக்கும். ஊசி போடப்பட்ட பிறகு அந்த பிள்ளை பெரிதாக அழுவதில்லை. கடுமையான வலி என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இராது. கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஊசி பயம் இருக்கிறது. ஆனால், இத்தனை வயதுக்குப் பிறகு ஊசிக்குப் பயம் என்பது அவமானமாக இருக்கும் என்பதால், தைரியமாக எதிர்கொள்வது போன்று நடிப்பார்கள். இதுவே மரணத்துக்கும் பொருந்தும்.

மரணம் எல்லோருக்கும் அச்சமூட்டக்கூடியதே. பெரும்பாலோர் தைரியசாலி போன்று நடிப்பார்களே தவிர, பயப்படாதவர்கள் இல்லை. அச்சம் இல்லாதவர் போன்று நடிப்பதே தைரியம் எனப்படுகிறது.

Leave a Comment