ஈஷா மையத்திற்குள் தகன மேடை
ஈஷா யோகா மையத்தில் பலர் காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி காவல் துறை தாக்கல் செய்த பதில் மனுவில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவல் துறை பதில் மனுவில், “ஈஷா மையத்திற்குச் சென்றவர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். இதில், பலரை காவல்துறையினரால் கண்டறிய முடியவில்லை. ஈஷா மையத்திற்குள்ளேயே தகன மையம் செயல்பட்டு வருகிறது. ஈஷா மையத்திற்குள் செயல்பட்டுவரும் மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் விநியோகிக்கப்படுகிறது.
ஈஷா மையத்தில் உள்ள 533 பேரிடம் உணவு, பாதுகாப்பு நிலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான குழு, ஈஷா மையத்தில் முறையாக செயல்பாட்டில் இல்லை” என்று தெரிவித்துள்ளது. ஈஷா யோகா மையத்தில் பலர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை; அங்கு தகன மேடை செயல்படுகிறது. இதற்கு அரசு அனுமதி பெறவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.
பிறப்பு, இறப்பு இரண்டையும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது ஈஷா மையத்துக்கு சென்ற பலரை காணவில்லை அவர்களைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை என காவல்துறை கூறும் நிலையில் ஈஷா மையத்திற்குள் சட்டத்துக்குப் புறம்பாக தகன மேடை செயல்பட்டது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. காணாமல் போனவர்கள் எல்லாம் எரிக்கப்பட்டவர்களா என்ற சந்தேகம் எழுகிறது. ஈஷா மையம் சட்டத்துக்கு அப்பாற்பட்டதா என்ற கேள்வியை எழுப்பியிருந்தது.
ஒரு மாநிலம் சம்பந்தப்பட்ட வழக்கை உடனே உச்சநீதிமன்றம் எடுத்து விசாரிப்பது தவறான முன்னுதாரணம் மாநில உயர்நீதிமன்றம் விசாரணை செய்வதுதான் சரியானது என்று பலரும் கருத்து தெரிவித்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் ஈஷா மையம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ப்ட்டது. அட்போது, நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான புலன் விசாரணையை நடத்த காவல்துறைக்கு எந்த தடையையும் விதிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் அடுத்த கட்ட விசாரணைக்கு அனுமதி வழங்கியிருக்கிறது.
மீண்டும் வழக்கு சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஈஷாவில் உள்ளே நிறுவப்பட்டிருக்கின்ற தகன மையம் இன்னும் செயல் படத் தொடங்கவில்லை என்று ஆதரவாளர்கள் குரல் கொடுக்கிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கட்டும்.