ஞானகுரு பதில்
கேள்வி : காட்டை அழிப்பது, நதிகளை இணைப்பது, கடல் மாசு போன்றவை எல்லாம் இயற்கைக்கு மனிதர் செய்யும் துரோகம்தானே..?
- டி.சந்திரசேகர், ராஜபாளையம்.
ஞானகுரு :
இயற்கை துரோகம் பற்றி மனிதர்கள் பேசுவதே அபத்தம். ஏனென்றால் ஆடை அணிவது, உணவு சேமிப்பது, வீடு கட்டுவது, ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது போன்ற எல்லாமே இயற்கைக்குப் புறம்பானது. சிந்திக்கத் தொடங்கியதுமே மனிதர்கள் இயற்கையுடன் மோதத் தொடங்கிவிட்டார்கள். இயற்கையை வென்றுவிட வேண்டும் என்று போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால், இந்த பிரபஞ்சத்தில் மனித இனம் என்பது தூசுக்கு சமானம். எனவே, எத்தனை முயற்சி செய்தாலும் இயற்கையை மனிதரால் அழிக்கவும் முடியாது, வெல்லவும் முடியாது. அதேநேரம் ஒரே ஒரு சுனாமி, பூகம்பம், நிலச்சரிவு மூலம் ஒட்டுமொத்த மனித குலத்தையும் இயற்கை அழித்துவிடலாம். எனவே, இயற்கையைப் பற்றிய கவலை மனிதருக்குத் தேவையில்லை. மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை நல்லவண்ணம் வாழ்ந்தால் போதும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
