என்ன செய்தார் சைதை துரைசாமி – 184
விளம்பரத்திற்காக செடி நடுவது போன்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துவிட்டு, அதன்பிறகு செடிகளை மறந்தே விடுவது வழக்கமான அரசியல்வாதிகளின் நடைமுறை. ஆனால், அப்படிப்பட்ட அரசியல்வாதியாக மேயர் சைதை துரைசாமி ஒருபோதும் செயல்படுவது கிடையாது. பூங்காவில் செடி நடும் நேரத்திலேயே, அந்த செடிகளுக்கு நீர் ஆதாரம் கிடைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்பட்டுள்ளதா என்பதை மிகத் தெளிவாகப் பரிசீலனை செய்து, திருப்தி அடைந்த பிறகே விழாவுக்கு ஒப்புக்கொள்வார்.
அதேபோல், தனியார் அமைப்பினர் செடி நடுவதற்கு அழைக்கும் நேரத்திலும், தொடர்ந்து அந்த செடியை பராமரிப்பதற்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, அந்த இடத்தில் குறிப்பிட்ட செடி வளர்வதற்கு வாய்ப்பு உண்டா என்பதை எல்லாம் கேட்டுத் தெரிந்தபிறகே அந்த விழாவுக்குச் சென்று மரம் நடுவதை ஆரம்ப காலத்திலிருந்தே கடைப்பிடித்து வருகிறார் மேயர் சைதை துரைசாமி.
பூங்காவில் செடிகளுக்கு எப்போதும் நீர் ஆதாரம் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார். பூங்காவில் கிடைக்கும் நிலத்தடி நீரினை வீணாக்காமல், கழிவு நீரை சுத்தப்படுத்தி பூங்காவிற்கு பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்தார். அதன்படி முதல் கட்டமாக 6-வது மண்டலத்தில் அமைந்திருக்கும் மூலிகை பூங்காவிலும், 8-வது மண்டலத்தில் அமைந்திருக்கும் போகன்வில்லா பூங்காவிலும், ரிப்பன் மாளிகை வளாக பூங்காவிலும் கழிவுநீரை சுத்தப்படுத்தி பயன்படுத்தும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. சாதனங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அதேபோன்று பெருநகர சென்னை மாநகராட்சி, பூங்காக்கள், சாலை மையத் தடுப்புகள் மற்றும் சாலை, மைய தீவுத்திட்டுகளுக்கு சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் செய்யும் சாதனங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. மேலும் சாலையில் அமைந்திருக்கும் செடிகளுக்கு நீர் விடுவதற்கும், பராமரிப்பு செய்வதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், அனைத்து பூங்காக்களிலும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்குவதும் கட்டாயமாக்கப்பட்டன. அதிகாரிகள் காட்டும் ஃபைலில் அப்படியே கையெழுத்து போடுபவராக இல்லாமல், ஒவ்வொரு விஷயத்திலும் எப்படிப்பட்ட மாற்றங்கள் செய்யலாம் என்று சிந்தித்து செயல்படும் மேயராகத் திகழ்ந்தார் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்