எந்த நேரமும் தடை வரலாம்.
இந்திய தேசத்தின் மறைக்க முடியாத அரசியல் கறை என்று கந்தகார் விமான ஹைஜாக் சம்பவத்தைச் சொல்லலாம். அந்த சம்பவத்தை முன்வைத்து நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கும் ஐ.சி.814 தி கந்தகார் ஹைஜாக் தொடருக்கு மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், சம்மன் அனுப்பியிருப்பது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.
அனுபவ் சின்ஹா இயக்கியிருக்கும் இந்த் வெப் சீரிஸில், இந்திய விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளின் பெயர்களில் போலா, சங்கர் என்ற இந்த மதப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பது சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இந்த விமான கடத்தலில் இந்து மதத்தைச் சேர்ந்த யாருமே ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
ஐசி-814 விமானத்தை ஹைஜாக் செய்தவர்கள் தங்கள் இஸ்லாமிய அடையாளத்தை மறைக்க போலி பெயர்களை வைத்திருந்தனர். அந்த போலி பெயர்களை இயக்குநர் அனுபவ் சின்ஹா பயன்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் குற்றங்களை சினிமா மூலம் மறைக்கும் நோக்கத்துடன் இந்த வெப் சீரிஸ் எடுக்கப்பட்டிருப்பதாக பாஜக நிர்வாகி அமித் மால்வியா குற்றம் சாட்டியிருக்கிறார்.
உண்மையில் இந்த தொடரில் எதுவும் மறைக்கப்படவில்லை. IC814 பைலட்டின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. விமான கடத்தல்காரர்கள் இதற்கு இந்து பெயர்களைப் பயன்படுத்தியுள்ளனர் & இது அரசாங்கப் பதிவில் உள்ளது, இது அரசாங்க இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இதையே தொடர் சொல்கிறது.
உண்மையில் இந்த கடத்தல் என்பது அன்றைய பிரதமர் அடல்பிஹாரி வாய்பாய் காலத்தின் உளவுத்துறை அமைப்புகளின் பெரும் தோல்வி ஆகும். அதனாலே, இதனை மறைப்பதற்கு சம்மன் அனுப்பி நிறுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இது தற்போதைய NSA அஜித் தோவல் செய்த தவறுகளையும் அம்பலப்படுத்தியது இது 2001 நாடாளுமன்றத் தாக்குதல்கள், 2008 மும்பைத் தாக்குதல்கள், 2019 புல்வாமா தாக்குதல்கள் போன்ற பல பயங்கரவாதத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மரணங்களுக்கு வழிவகுத்தது. அதனாலே இந்த தொடருக்கு தடை வருவதற்கு வாய்ப்பு உண்டு என்கிறார்கள். எதற்கும் சீக்கிரமே பார்த்துவிடுங்கள்.