அமெரிக்காவில் குப்பை மேலாண்மை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 410

மேயர் சைதை துரைசாமியின் முயற்சி காரணமாகவே பெருநகர சென்னை மாநகராட்சியுடன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள சான் ஆன்டனியோ மாநகரம் மற்றூம் டென்வர் மாநகரத்துடனுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

ஒப்பந்தம் நிறைவேறிய பிறகு வழக்கமான சுற்றுலாப் பயணிகள் போன்று அமெரிக்காவின் முக்கியப் பகுதிகளை சுற்றிப் பார்ப்பதற்கு மேயர் சைதை துரைசாமி ஆர்வம் காட்டவில்லை. வழக்கம்போல் சான் ஆன்டனியோ மாநகரத்தில் குப்பை மேலாண்மை எப்படி செயல்படுத்தப்படுகிறது என்று ஆய்வு மேற்கொண்டார்.

சான் ஆன்டனியோ  மாநகரில் எந்தத் தெருவிலும் குப்பை தொட்டிகளோ, தொகுப்பு குப்பை தொட்டிகளோ அல்லது குப்பை மாற்று நிலையங்களோ இல்லை.  ஒவ்வொரு வீட்டிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பைக்கு சக்கரம் பொருத்திய  2 தொட்டிகள் உள்ளாட்சி நிர்வாகம் மூலமாக வழங்கப்பட்டு, அதன் மூலமாக வாரம் ஒரு முறை குப்பை சேகரிக்கப்படுகின்றன. இந்தக் குப்பைகள் மறு சுழற்சி செயப்படுகிறது.

அமெரிக்காவில் தார்ச் சாலைகள் ஏழெட்டு ஆண்டுகளும், நெடுஞ்சாலைகள் 20 ஆண்டுகள் உழைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. சாலைகளுக்குப்  பயன்படுத்தப்படும் கலவையில் நீடித்த உழைப்பிற்காக 30 விழுக்காடு பிளாஸ்டிக் கலக்கப்படுவதை மேயர் சைதை துரைசாமி அறிந்தார்.

இதன் அடிப்படையிலே சென்னையில் சாலைக் கலவையில் பிளாஸ்டிக் கலவையை மேயர் சைதை துரைசாமி அறிமுகம் செய்தார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment