வெள்ளத்துக்கு செம்பரம்பாக்கம் காரணமா..?

என்ன செய்தார் சைதை துரைசாமி – 437

2015 சென்னை பெருவெள்ளத்திற்கு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதுதான் காரணம் என்று ஒரு பொய்யான செய்தி திட்டமிட்டு அன்று முதல் இன்று வரை பரப்பப்பட்டு வருகிறது.

உண்மையான காரணம் என்னவென்றால் வரைமுறையின்றி நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்த காரணத்தினால்  அடையாறு நீர் கடலுக்குள் பாய்ந்து செல்ல வழியில்லாமல்  ஊருக்குள் திரும்பியது. அதனாலே வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது.

இதற்கு முன்னரும் செம்பரம்பாக்கத்தில் இருந்து  அதிக அளவு  தண்ணீர்  திறக்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம்  தண்ணீர் ஊருக்குள் நுழையவில்லை. ஏனென்றால் அப்போதெல்லாம் இவ்வளவு அதிகமாகவும், பரவலாகவும் நகரம் முழுவதும் பெருமழை பெய்யவில்லை. மேலும் அந்த நேரத்தில் மேற்கு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஏரிகள் நிரம்பி அவற்றின் உபரிநீர்  அடையாற்றில் கலக்கவும் இல்லை.  

அதனால் சென்னை பெருவெள்ளத்தின் போது மனிதத் தவறு எதுவும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை. செம்பரம்பாக்கம் ஏரி சரியான நேரத்தில், போதிய அறிவிப்பு கொடுத்த பிறகுதான் திறக்கப்பட்டது. சென்னை மக்களை இயற்கை மட்டுமே வஞ்சித்தது என்பதுதான் உண்மை.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment