குப்பை மேலாண்மைக்கு வாக்கி டாக்கி

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 313

எந்த ஒரு பணியில் இறங்கினாலும், அதனை முழுமையாகவும் செம்மையாகவும் செய்து முடிப்பது மேயர் சைதை துரைசாமியின் ஸ்டைல். அதனால் தான், குப்பை அகற்றும் பணியில் ஒவ்வொரு இடத்திலும் சீர்திருத்தம் மேற்கொண்டார். குப்பை கொட்டப்படும் இடம், குப்பை அள்ளப்படும் இடம், குப்பை சேகரிக்கும் இடம் என எல்லா இடங்களுக்கும் நேரில் சென்று நின்று, நிலவரத்தை முழுமையாக ஆய்வு செய்தே நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

இந்த விஷயத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கும் களப்பணியாளர்களுக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றம் செய்வதில் இடையூறுகள் இருப்பதைக் கண்டார். இதை நிவர்த்தி செய்யும் வகையில், களப்பணியாளர்கள் தங்கள் அன்றாடப் பணி குறித்து குறுஞ்செய்தி மூலம் அறிக்கை அளிக்கும் நடைமுறை மேயர் சைதை துரைசாமியால் அறிமுகம் செய்யப்பட்டது.

நிறைய இடங்களில் இணைய இணைப்பு கிடைப்பதில்லை, ஒருவரையொருவர் தொடர்புகொள்ள இயலவில்லை. இதனால் களப்பணியில் தாமதம் நிகழ்வதாக புகார் எழுந்தன. இதை தவிர்க்கும் வகையில், துப்புரவுப் பணியை மேற்பார்வை செய்யும் துப்புரவு ஆய்வாளர்களுக்கும், ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கும் வாக்கிடாக்கி வழங்கப்பட்டது. இப்படியொரு அதிரடி நடவடிக்கையை யாருமே எதிர்பார்க்கவில்லை. அதனால் பணியில் ஒருங்கிணைப்பும் செயல்திறனும் மேம்பட்டது. இதனால் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்களின் எண்ணிக்கை குறைவடைந்தது.

இதுதவிர, சென்னை மாநகராட்சியில் முதன்முறையாக பொதுமக்கள் தாங்களாகவே திடக்கழிவு மேலாண்மையின் செயல்திறனை உறுதிப்படுத்தும் விதமாக, மாநகராட்சி இணையதளத்தில், துப்புரவுப்பணி குறித்து கருத்துக்களை பதிவு செய்வதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது.. இதனால் மக்கள் குப்பை குறித்த குறைகளை வெளிப்படையாக தெரிவிக்கத் தொடங்கினார்கள். எங்கு குறைகள் உள்ளன, எப்படி தீர்க்கவேண்டும் என்பதை திட்டமிடுவதற்கு இந்த ஆன்லைன் புகார் பதிவு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்த வகையில் குப்பை மேலாண்மைக்கு புதிய புதிய ஆலோசனைகள் என கொடுத்துக்கொண்டே இருந்தார் மேயர் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment