• Home
  • மனம்
  • விவேகானந்தரின் மூட நம்பிக்கை

விவேகானந்தரின் மூட நம்பிக்கை

Image

விவேகானந்தர் மிகப்பெரும் ஆன்மிக ஞானியாக கருதப்படுகிறார். அதேநேரம், மூட நம்பிக்கைக்கு எதிராக அவர் எப்படி குரல் கொடுத்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

1897ம் ஆண்டு சென்னைக்கு வந்த விவேகானந்தர் திருவல்லிக்கேணியில் பேசிய உரையின் சிறு பகுதி இது. ‘’மூடநம்பிக்கைகளை எல்லாம் மதம் என்ற பெயரில் அனுமதித்துத் தன்னைத் தானே பாழ்படுத்திக்கொள்கின்ற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 அவன் கல்வி அறிவு பெற்றவன். ஆனால், ஒன்றைப் பற்றிக்கொண்டு அதுதான் சரியென்று சாதிப்பவன்.  ஒவ்வொரு மூடநம்பிக்கையும் அவனுக்கு வேத விதி. அவனைப் பொறுத்தவரை அவைகளைப் பின்பற்றுவதைச் சார்ந்துதான் தேசிய வாழ்க்கையே இருக்கிறது. இத்தகையவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் உடைய முட்டாள்களாக இருப்பதைவிட நீங்கள் நாத்திகர்களாக இருப்பதையே நான் விரும்புகிறேன். ஏனென்றால் நாத்திகனிடம் உயிர்த்துடிப்பு இருக்கிறது. அவனிடம் நீங்கள் ஏதாவது நல்லதை உருவாக்க முடியும்.  ஆனால், மூடநம்பிக்கை மட்டும் நுழைந்துவிடுமானால் சிந்திக்கும் திறன் போய்விடுகிறது; மூளை மழுங்கிவிடுகிறது…’’ என்று பேசியிருக்கிறார்.

மனிதராகப் பிறந்த ஒவ்வொரு நபரும் மூட நம்பிக்கைக்கு எதிராக போராடத்தான் வேண்டும்.

Leave a Comment