விவேகானந்தரின் சூப்பர் டீலிங்

Image

நகைச்சுவை அல்ல, தத்துவம்

* எரியும் விறகு அடுப்பின் அருகே ஒரு நிமிடம் அமர்ந்தாலும், அது ஒரு மணி நேரமாகத் தோன்றும். அதுவே, முன்பின் அறிமுகமில்லாத  அழகான இளம் பெண்ணருகே ஒரு மணி நேரம் அமருங்கள். அது ஒரு வினாடி போல தோன்றும். இதுதாங்க  ரிலேட்டிவிட்டி தியரி.

* நேரம் தவறாமல் அலுவலகம் வருபவருக்கு ஒரே ஒரு  சிக்கல் உண்டு. ஆம்,  உங்களைப் பாராட்ட அங்கே யாரும் வந்திருக்க மாட்டார்கள்.

* அதிர்ஷ்டத்தை நம்பித்தான் ஆகவேண்டும். நமக்குப் பிடிக்காதவர்களின் வளர்ச்சியை  பிறகு எப்படித்தான் ஜீரணிப்பது?

 * மூளை ஒரே ஒரு நிமிடம்கூட நில்லாமல் சுறுசுறுப்பாக வேலை செய்யும் என்பது உண்மைதான். ஆனால்,  அழகான  பெண்ணைப் பார்க்கும்போது மட்டும் அது, வேலை செய்வதே இல்லை.

* மது குடிப்பதால் எந்தப் பிரச்னையும் தீர்ந்துபோகாது என்று சொல்லவே முடியாது. ஏனென்றால், மது விரைவில் தீர்ந்துபோகும்.

* பெண்களை சமாளிப்பது சாதாரண விஷயமில்லை. ஆனால், அதில் விவேகானந்தர் கிங். விவேகானந்தரின் அறிவாற்றலைக் கண்டு வியந்த மேனாட்டுப் பெண் ஒருத்தி அவரை தனிமையில் அணுகி, ‘‘எனக்கு தங்களைப் போன்று ஒரு மகன் வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது, அதனால் எனக்கு நீங்கள் புத்திர பாக்கியம் அருள வேண்டும்’’  என்று கேட்டாள்.

அதற்கு விவேகானந்தர் சற்றும் தாமதிக்காமல், ‘‘அம்மா… என்னைப் போன்று ஒரு குழந்தை எதற்கு? இதோ இப்போதே என்னையே உங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள்.’’ என்றார்.

வந்திருந்த பெண்மணி விவேகானந்தரின் சிஷ்யையாக மாறிப்போனாள்.

Leave a Comment