என்ன செய்தார் சைதை துரைசாமி – 393
சென்னை, மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை பொதுப்பணித் துறை எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்ட செய்தி சமீபத்தில் வெளியானது. மேலும் அவர் சர்தார் பட்டேல் சாலையில் காந்தி மண்டபம் சாலை முதல் ஜிஎஸ்டி சாலை வரை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் போன்ற முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இருப்பதால் கடுமையான நெரிசல் இருப்பதைப் பார்வையிட்டார். தற்போதைய நான்கு வழித்தட சாலையை ஆறு வழித்தடமாக விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும்படி அலுவலர்களுக்கு ஆணை பிறப்பித்தார்.
இந்த செய்தியைப் படிக்கையில், மேயர் சைதை துரைசாமியின் தீர்க்கதரிசன சிந்தனையும் தொலைநோக்குப் பார்வையுமே மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஞாபகத்திற்கு வரும். ஏனென்றால் பெருநகர சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் முதல் கட்டமாக சாலை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்று ஆய்வு மேற்கொண்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.
சாலை விரிவாக்கத்திற்கு தனியார் நிலங்களை எடுப்பதற்கு முன்பாக மத்திய அரசு, மாநில அரசு நிலத்தைப் பெறுவதற்கு முன்னுரிமை கொடுத்தார் மேயர் சைதை துரைசாமி. அதன்படி முதல் கட்டமாக அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கி மத்திய கைலாஷ் வரையிலும் சாலை விரிவாக்கப் பணிக்காக மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான நிலங்களில் முன்நுழைவு அனுமதி பெறுவதற்கும், சம்பந்தப்பட்ட துறைகளை அணுகுவதற்கும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த விரிவாக்கம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அமைச்சர்களை மேயர் சைதை துரைசாமியே நேரில் சந்தித்துப் பேசினார். அண்ணா பல்கலைக்கழக நிலம் வாங்கி சாலையை அகலப்படுத்திய நேரத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான சி.எல்.ஐ.ஆர். எனப்படும் மத்திய தோல் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் நிலத்தை வாங்குவதற்காக மேயர் சைதை துரைசாமியே நேரடியாக டெல்லிக்குச் சென்றார். அப்போது துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை எம்.பி.யை அழைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், அதிகாரிகளை எல்லாம் நேரில் சந்தித்து இடத்துக்கு அனுமதி பெறும் நடவடிக்கை மேற்கொண்டார்.
அப்போது மேயர் துரைசாமி திட்டமிட்டிருந்த வகையில் சாலை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கை தீவிரம் காட்டப்பட்டிருந்தால் போக்குவரத்து நெரிசலில் இருந்து சென்னை ஓரளவு தப்பியிருக்கும்
- நாளை பார்க்கலாம்