• Home
  • அரசியல்
  • பா.ஜ.க. முகத்திரை கிழிக்கும் வினேஷ் போகத்.

பா.ஜ.க. முகத்திரை கிழிக்கும் வினேஷ் போகத்.

Image

சூடு பிடிக்கும் ஹரியானா தேர்தல்

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெறும் வாய்ப்பு பறிக்கப்பட்ட வினேஷ் போகத்திற்கு ஹரியானா சட்டசபை தேர்தலில் ஜுலானா தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி இடம் வழங்கி உள்ளது. இந்த தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் முழு மூச்சுடன் களம் இறங்கியிருக்கும் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா இருவரும் சேர்ந்து பா.ஜ.க. மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.

தேர்தல் பிரசாரத்தில் வினேஷ் போகத், ‘’எனக்கு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் கிடைக்கக் கூடாது என நினைத்து நம் தேசத்திற்கு தங்கப் பதக்கம் கிடைக்காமல் செய்தவர்கள் தேச பக்தர்கள் வேடமிட்ட தேசத் துரோகிகள்…’’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

மேலும அவர், ‘’ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக வந்து சந்தித்து என்னுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தவிர எனக்காக எந்த ஒரு உதவியும் பி.டி. உஷா செய்யவில்லை எனக்கு துணையாகவும் நிற்கவில்லை.

நான் என் பெயரில்தான் வழக்கு பதிவு செய்து போராடினேன் இந்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை. இவர்கள் ஆட்சியை பிடிக்க நாட்டையும் காவு கொடுப்பார்கள்’’ என்று கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

வினேஷ் போகத்திற்கு எந்த பதிலடியும் தரவேண்டாம் என்று பா.ஜ.க. மேலிடம் உத்தரவு போட்டிருப்பதால் கட்சியினர் எதுவும் பதில் பேச முடியாமல் அமைதி காக்கிறார்கள். வினேஷ் போகத் அதிரடியால் ஹரியானா தேர்தல் சூழல் காங்கிரஸ்க்கு சாதகமாக மாறியிருக்கிறது.

Leave a Comment