வாரச்சந்தையில் கிராமியக் கலைகள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 385

விவசாயிகள், பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் மக்களின் நன்மையைக் கருத்தில்கொண்டு வாரச்சந்தை எனும் புதிய திட்டத்தை தமிழகம் முழுக்கவே கொண்டுவருவதற்கு மேயர் சைதை துரைசாமி செம்மையாகத் திட்டமிட்டார். அதேநேரம், அந்த சந்தையானது பொருட்கள் வாங்கும் விற்கும் இடமாக இருப்பது மட்டுமின்றி, பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்துசெல்லும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்க வேண்டும் என்றும் விரும்பினார்.

அதனால் வாரச்சந்தைக்கு செலவுப் பட்டியல் திட்டமிட்ட நேரத்தில் மக்கள் மகிழ்ச்சிக்கு உதவும் பொழுதுபோக்குக்கும் பணம் ஒதுக்கினார். அந்த வகையில் வாரச்சந்தையில் கிராமிய நடனங்கள், பொம்மலாட்டம், பலகுரல் நிகழ்ச்சி போன்றவை நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார். இதன் மூலம் கிராமியக் கலைஞர்களுக்கும் தொடர் வருமானம் கிடைக்கும். அதோடு, கிராமியக் கலைகள் மக்கள் மத்தியில் பேரும் புகழும் அடைவதற்கு வாய்ப்பு உண்டு என்று திட்டமிட்டார். இந்த வகையில் ஒவ்வொரு வாரச் சந்தையிலும் நான்கு குழுக்கள் மூலம் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்குத் திட்டமிட்டார்.

இந்த வாரச்சந்தையின் கடை அமைப்பு மட்டுமின்றி பொருட்கள் அடுக்கிவைக்கும் விதம் ஒரே ஒழுங்குமுறையில் இருக்கும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டது, இங்கு வியாபாரம் செய்பவர்களுக்குப் போதிய வசதிகள் செய்து தரவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார். அதாவது விற்பனைப் பொருட்கள் மட்டும் கொண்டுவந்தால் போதும், மற்ற அனைத்து வசதிகளும் மாநகராட்சியே செய்து தரவேண்டும் என்று கருதினார். எனவே, ஒவ்வொரு கடையிலும் ஒரே மாதிரி ப வடிவ ராக்குகள் மற்றும் சீலிங் காத்தாடிகள் போன்றவை இருக்கும்படி திட்டமிடப்பட்டது.

இந்த சந்தைக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதால், அதற்கு மின்வாரியத்திற்குத் தேவையான மின் வைப்புத் தொகை உருவாக்கவும் மேயர் சைதை துரைசாமி முடிவு செய்தார்.

இந்த வகையில் மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட இன்னொரு ஏற்பாடு அத்தனை பேரையும் அசர வைத்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment