இறங்கி அடிக்கிறாங்கப்பா
‘அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா..?’ என்று விஜய் மேடையில் கொந்தளித்தார். இதற்கு திருமாவளவன் உள்ளிட்ட பலரும், ‘இப்படி பேசுவதைப் பார்த்தால் பாசிசத்துக்கு ஆதரவு கொடுப்பது அப்பட்டமாகத் தெரிகிறது என்று கொதித்தார்கள்.
தி.மு.க.வினரும் இது குறித்து, ‘டியர் விஜய் Time to lead எனும் ஒரு சின்ன tag line க்காக, தலைவா படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் பண்ண விடாம உங்க ரசிகர்களை பெங்களூருக்கு கூட்டம் கூட்டமா ஓடிப் போய் படம் பாக்க வச்சது தான் “ஜெயில்”லலிதா வின் பாசிசம். அதே ரசிகர்கள் கூட்டத்துக்கு முன்னாடி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் போதே திமுக தான் எங்க அரசியல் எதிரினு உங்களை தமிழ்நாட்டிலேயே தைரியமா பேச வச்சது தான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி’ என்று போட்டுத் தாக்கினார்கள்.
இதற்கு விஜய் டீம் ஆட்கள் இறங்கி அடிக்கிறார்கள். ’பரந்தூர் விமான நிலையம் என்ற பெயரில் விவசாயிகள் நிலத்தை பிடிங்கி பாயாசம் பொங்க வைக்கிறது திமுக அரசு. 8 வழி பசுமைச் சாலை என்ற பெயரில் விவசாயிகள் நிலத்தை பிடிங்கி பாயாசம் போடுகிறது திமுக அரசு. விசாரணை என்ற பெயரில் நிகழும் பல லாக்கப் மரணங்களை பாயாசம் போட்டு மூடி மறைக்கிறது திமுக அரசு.
என்கவுன்டர் என்ற பெயரில் பல பாயாசத்தை திமுக அரசு போட்டுள்ளது. சாதிய வாக்குகளுக்கு அஞ்சி வேங்கைவயல் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த அயோக்கியர்களை இன்னும் கைது செய்யாமல் மல பாயாசம் போட்டுக்கொண்டு இருக்கிறது திமுக அரசு. கன்னியாகுமரி மலைகளை குடைந்து திருடி கேரளாவிற்கு முறைகேடாக பாயாசத்தை அனுப்பிக்கொண்டு இருக்கிறது திமுக அரசு. நீட் ஒழிப்பு ரகசியம் தெரியும் என்று சொல்லி ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் பாயாசத்தை போட்டது திமுக அரசு.
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஆற்றுமணலை அள்ளி கொள்ளையடித்து அந்த காசில் பாயாசத்தை போடுகிறது திமுக அரசு. முந்தைய திமுக ஆட்சியில் கீழ்வெண்மணி படுகொலை, மாஞ்சோலை படுகொலைகள் என பல நூற்றுக்கணக்கான பாயாசத்தை போட்டுள்ளது திமுக. பாசிச பாயாசத்தை திமுக அரசு தன் ஆட்சியில் கிண்டிக்கொண்டு இருக்கிறது. இதை தான் விஜய் பாசிச பாயாசம்’’ என்று ஓங்கி அடிக்கிறார்கள். எல்லாமே நியாயமாகத் தான் இருக்குது