பொறுப்பான தலைவனாக விஜய் பேச்சு

Image

போதைப் பொருட்களுக்கு நோ சொல்லுங்க

இன்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு விழா திருவான்மியூரில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் ஆழமும் அர்த்தமும் நிறைந்த வகையில் பேசியிருக்கிறார். “உங்களுக்கு ஒரு சின்ன அறிவுரை. அது நண்பர்கள் மற்றும் நட்பு தொடர்பானது. ஒருகட்டத்துக்கு பிறகு பெற்றோர்களை விட நண்பர்கள் உடன் அதிகமான நேரம் செலவிடும் சூழல் ஏற்படும். அதனால் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள். நட்பு என்பது அதுவாக அமைவது, நாம் எப்படி தேர்ந்தெடுக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். அது ஒருவிதத்தில் சரி தான்.

எனினும், உங்களின் நட்பு வட்டாரத்தில் சிலர் தவறான பழக்கங்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்றால், முடிந்தால் அவர்களை நல்வழிப்படுத்தப் பாருங்கள். மாறாக நீங்கள் தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடாதீர்கள். உங்களுடைய அடையாளத்தை எக்காரணத்தை கொண்டும் இழந்துவிடாதீர்கள்.

இதனை நான் ஏன் இவ்வளவு வலியுறுத்தி சொல்கிறேன் என்றால், சமீபகாலத்தில் தமிழகத்தில் போதைப்பொருட்களின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் மிக அதிகமாகிவிட்டது. ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் இயக்கத்துக்கு தலைவர் என்ற முறையிலும் எனக்கே இது மிக அச்சமாக உள்ளது. போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டியது ஆளும் அரசின் கடமை. இப்போது ஆளும் அரசு அதலெல்லாம் தவறவிட்டு விட்டார்கள்’ என்பதை நான் சொல்லவரவில்லை. அதற்கான மேடையும் இது இல்லை.

அரசாங்கத்தை விட நமது வாழ்க்கையை, பாதுகாப்பை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். உங்களது சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு அதனை எப்போதும் வளர்த்துக் கொள்ளுங்கள். say no to drugs என்கிற இந்த உறுதிமொழியை எல்லோரும் எடுத்துக் கொள்ள வேண்டும். Say NO to Temporary Pleasures என்றும் சொல்லிக்கொள்வோம்’’ என்று பேசியிருக்கிறார்.

மேலும், ‘’தேர்வில் மதிப்பெண் எடுக்க முடியாதவர்கள் சோர்ந்து போக வேண்டாம். வெற்றி முடிவு அல்ல, தோல்வி தொடர்கதை அல்ல. இதனை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்.” என்று தெரிவித்தார்.

ஒரு நல்ல பொறுப்புள்ள தலைவனுக்குரிய பேச்சாக விஜய் பேசியிருப்பது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Leave a Comment