டிவிகே கட்சிக்கு விஞ்ஞான விளக்கம்.
கடலூர் வெள்ள நிவாரணத்துக்கு நேரில் போக முடியாத விஜய் கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துக்காக தனி விமானத்தில் கோவா போனது சமூகவலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதோடு டிவிகே என்ற கட்சிக்கு புதிய விளக்கம் கொடுத்து அலற விடுகிறார்கள்.
த்ரிஷா, விஜய் கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று பெயர்களின் சுருக்கமே டிவிகே என்று சொல்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் கல்யாணம் முடித்தாலும் அவர் இன்னமும் த்ரிஷா போலவே அண்ணி என்று விஜய் ரசிகர்கள் பாசக்கவிதை வடிக்கிறார்கள். இந்த தனி விமானத்தில் த்ரிஷாவை எப்படி கூட்டிக்கொண்டு போகலாம் என்று நாம் தமிழர் தம்பிகள் கடுமையாக விமர்சனம் வைக்கிறார்கள்.
சீமான் இன்னமும் பொதுவிமானத்தில் போகிறார். ஆனால், விஜய் மட்டும் தனி விமானத்தில் போகலாமா..? இப்படி தனி விமானத்தில் செல்ல வேண்டும் என்று அண்ணன் ஆசைப்பட்டால் அதற்கும் நாங்கள் திரள் நிதி கொடுக்க வேண்டியிருக்குமே என்று கோபம் காட்டுகிறார்கள்.
அதேநேரம் தி.மு.க.வினர், ‘’விஜய் த்ரிஷாவுடன் தனி விமானத்தில் போனார் என்பதை எல்லாம் பெரிதாகப் பார்க்க வேண்டியதில்லை. இந்த கல்யாணத்துக்கு புஸ்ஸி ஆனந்தைக் கூட்டிச்செல்லாமல் ராஜேந்திரன் என்கிற பாஜக-காரருடன் பயணம் செய்திருக்கிறார். அப்படியென்றால் விஜய்யின் பனையூருக்குள் பா.ஜ.க. வந்துவிட்டது என்றுதானே அர்த்தம்’’ என்கிறார்கள்.
சங்கீதா இதை எல்லாம் எப்படி பொறுத்துக்கொள்கிறாரோ, பாவம்.