• Home
  • அரசியல்
  • தி.மு.க. அமைச்சரை கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்

தி.மு.க. அமைச்சரை கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்

Image

கோட் அலப்பறைகள் ஆரம்பம்

120 ரூபாய் டிக்கெட்டை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். ரசிகர்களிடம் பணத்தை இப்படி விஜய் கொள்ளையடிக்கக் கூடாது. பொதுவாழ்வுக்கு வர நினைக்கும் விஜய், இதுபோன்ற அநியாயங்களைத் தட்டிக் கேட்க வேண்டும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீண்டும் விஜய்யை வம்புக்கு இழுத்திருந்தார்.

அமைச்சருக்கு விஜய் ஆதரவாளர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்துவருகிறார்கள். அவர்களுடைய விமர்சனத்தில், ‘’அன்பரசன் ஐயா அவர்களுக்கு வணக்கம். சமீப காலமாக எங்களுக்கு எதிராக தாமாக முன் வந்து அவதூறாக பேச ஆரம்பித்து உள்ளீர்கள். யாரை குஷிப்படுத்த பேசி வருகிறீர்கள் என்று மக்களுக்கு தெரியும். சரி விஷயத்துக்கு வருவோம்.

கோட் படத்தை யாரும் 2000 ரூபாய்க்கு விற்பனை செய்ய வில்லை. தவறான செய்தியை பரப்ப வேண்டாம். தமிழக வெற்றிக் கழகத்தை சார்ந்த தோழர்கள் தங்களின் சொந்த பணத்தில் குறிப்பாக உழைத்த பணத்தில் டிக்கெட் எடுத்து தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், சிறுவர், சிறுமிகள்,முதியவர்கள் என்று பலரையும் தியேட்டருக்கு படம் பார்க்க இலவசமாக அழைத்து செல்கிறார்கள். தளபதி அவர்களின் படம் வெளி வருகின்றன ஒவ்வொரு ஆண்டும் தளபதியின் தோழர்கள் இந்த உதவியான செயலை செய்து வருகிறார்கள்.

கோட் படம் வெளிவர உள்ளது. தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்கள் மக்களுக்கு ஏராளமான நலத் திட்ட உதவிகள் செய்ய உள்ளார்கள். அந்த உதவிகள் அனைத்தும் தளபதி அவர்களின் பொருளாதார உதவியாலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்கள் உழைத்த பணத்தின் உதவியாலும் நடைபெற்று வருகிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒரு படம் உருவாகுவதற்கு பலர் உழைக்கிறார்கள். தயாரிப்பாளர் பணத்தை முதலீடு செய்கிறார். பட விநியோகஸ்தர்கள்,தியேட்டர் உரிமையாளர்கள் என்று பலரும் கடுமையாக உழைக்கிறார்கள். 100 ரூபாய் கலைஞர் நாணயத்தை சொந்த கட்சிகாரர்களிடம் 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்த நீங்கள் இதையெல்லாம் பேசலாமா? சிரிப்பு வருகிறது ஐயா.

மாணவர்களுக்கு இன்னும் ஏன் மடிக்கணினி கொடுக்காமல் இருக்கிறீர்கள்? கல்விக் கடனை ரத்து செய்யாமல் இருக்க காரணம் என்ன? நீட் நுழைவு தேர்வை எப்பொழுது ரத்து செய்வீர்கள்? குடி தண்ணீரில் மலம் கலந்தவர்கள் யார்? மதுக் கடைகளை படிப்படியாக மூடுவோம் என்று சொன்னீர்களே இந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை கடையை மூடி உள்ளீர்கள்? கள்ளச் சாராயம் புழக்கம் எப்படி சமூகத்தில் இயல்பாக உள்ளது என்று சொல்ல முடியுமா? உங்கள் வருங்கால எதிர்காலத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வெளியிடுகின்ற படத்திற்கு உங்கள் கட்சியை சார்ந்த எத்தனை உறுப்பினர்களுக்கு இலவச டிக்கெட் கொடுத்துள்ளீர்கள் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்களால் சொல்ல முடியுமா?

உங்கள் வருங்கால எதிர்காலம் நடித்து வெளிவந்த படத்தை பார்க்க வந்த உங்கள் கட்சியைச் சேர்ந்த எத்தனை பேருக்கு இலவச டிக்கெட் கொடுத்துள்ளீர்கள் என்று சொல்ல முடியுமா? மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து பதட்டத்தில் எதையாவது பேசாமல் தயவு செய்து மக்கள் பணி செய்ய தீவிரம் காட்டுங்கள். திருவண்ணாமலையில் உள்ள செய்யாறு அரசு கல்லூரி வளாகத்தில் பாம்புகள் நடமாட்டம் நீண்ட நாட்களாக மிகவும் அதிகமாக உள்ளது என்று மாணவ, மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். அதை என்னனு போய்ட்டு பாருங்கள்’’ என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.

Leave a Comment