• Home
  • அரசியல்
  • பகலில் கதிகலங்கும் விஜய் மாநாடு.. இரவு என்னாகும்..?

பகலில் கதிகலங்கும் விஜய் மாநாடு.. இரவு என்னாகும்..?

Image

எச்சரிக்கை ப்ளீஸ்

விஜய் மாநாடுக்கு அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் வரத்தொடங்கிவிட்டார்கள். அதனால் பகல் 12 மணிக்கே அரங்கு நிரம்பிவிட்டது. இன்று மாலை 6 மணிக்குத் தான் விஜய் பேசுவதாக இருக்கிறார். வரும் வழியில் நிறைய விபத்துகள் நடந்திருக்கும் நிலையில், இரவு என்னாகும் என்ற அச்சம் தமிழகம் முழுக்கவே நிகழ்கிறது.

இன்று காலை தவெக மாநாடு செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணமில்லா பயணம் தவெக மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, ஓங்கூர் ஆகிய 3 சுங்கச்சாவடிகளில் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. ஜீரோ டிராபிக் என்ற நிலையை ஏற்படுத்த சுங்கச்சாவடிகளில் கட்டணமில்லாமல் வாகனங்களை காவல்துறை அனுமதிக்கிறது… ஆயிரக்கணக்கான வாகனங்கள் விக்கிரவாண்டி நோக்கி செல்லும் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலையிலிருந்தே தொண்டர்கள் அதிகம் கூடியுள்ளனர். வெயிலின் தாக்கத்தால் சிலர் மயக்கமடைந்ததாக செய்திகள் வருகின்றன. இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது. தண்ணீர், தொப்பி, குடை கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தாலும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.

மாநாட்டு பார்வையாளர் பந்தலில் பல இடங்களில் கட்டுக்கடங்காத இளைஞர் படையால் ஏறி குதித்தல், நாற்காலி உடைத்தல், விதிமுறை மீறுதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது, இந்த இளைஞர் படை, இள ரத்தம், இரவு வரை எப்படி தாக்குப் பிடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால் 2 மணிக்கு மேல் கலை நிகழ்ச்சி தொடங்குகிறது. 4 மணி முதல் 4.30 மணிக்குள் கொடி ஏற்றும் விஜய், 6 மணிக்கு விழா மேடையில் சிறப்புரை ஆற்றுகிறார் என்று சொல்ல்ப்படுகிறது. விஜய் பேசி முடிப்பதற்கு 7.30 மணி ஆகலாம் என்பதால் இரவு வீடு திரும்புவதற்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்படும் வாய்ப்பு தென்படுகிறது.

விமான சாகசத்தில் நடந்தது போன்று குளறுபடியாகாமல் விழா நடந்து முடியட்டும்.

Leave a Comment