விஜய் அண்ணாவுக்காக வந்துட்டாருய்யா விஜயலட்சுமி…

Image

சீமான் ஆபாச வீடியோ ரிலீஸ்?

விஜய் மீது சீமான் கடுமையாக விமர்சனம் வைத்த நேரத்திலேயே, எந்த நேரமும் விஜயலட்சுமி ஆஜராகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கொஞ்சம் லேட் என்றாலும் லேட்டஸ்டாக வந்து தெறிக்க விட்டிருக்கிறார் விஜயலட்சுமி. சீமானுடைய ஆபாச வீடியோ வெளியே வரப்போகிறது என்று புதிய குண்டு போட்டிருக்கிறார்.

விஜயலட்சுமிக்கும் சீமானுக்கும் இடையில் நீண்ட காலமாகவே பூனை, எலி பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது ஒரு வீடியோ போட்டு தம்பிகளை கதற வைத்துவிட்டு காணாமல் போய்விடுவார். நீண்ட நாட்களாக எந்த வீடியோவும் வெளிவராமல் இருந்தது.

விஜய்யின் கொள்கைகளை கிண்டல் செய்த சீமான், ஏதாச்சும் ஒரு பக்கம் நில்லு இல்லைன்னா லாரி அடிச்சு செத்தே போவே என்று சாபம் விட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயலட்சுமி இன்று வீடியோ போட்டிருக்கிறார். ‘’நீ என்ன கண்ணகியா பத்தினி மாதிரி சாபமெல்லாம் விடுற. தி.மு.கவுக்கு ஒரு கொள்கை இருக்குது, விஜய் அண்ணா கொள்கையை அவர் பார்த்துக்கிடுவார். உன்னுடைய வேலை மட்டும் ஒழுங்காப் பாரு.

நீ யாருன்னு நல்லாவே மக்களுக்குத் தெரியும். உன்னோட ஆபாச வீடியோவை திருச்சி சூர்யா வெளியே விடப் போறார். அதுக்கப்புறம் உன் பொழைப்பு நாறிப்போயிடும். உன் கட்சி வேலையை மட்டும் பார்க்காம இப்படி சாபம் விடுறதா இருந்தால் சும்மா விட மாட்டேன்’’ என்று விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார்.

’’சீமானை யாரும் கண்டுக்காதீங்க…’’ என்று விஜய் சொன்ன அர்த்தம் இது தானா என்று இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Leave a Comment