விஜய் ஆட்சியில் ஏழு அதிசயங்கள்

உலக அதிசயம் ஏழு என்பார்கள். அந்த வகையில் தமிழகத்தில் நம்பவே முடியாத 7 அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார் முதல்வர் விஜய். சைலன்ட் ஆக தமிழகத்தில் நடந்திருக்கும் 7 அதிசய மாற்றங்களைப் பார்க்கலாம்.

1.     தற்குறி என்று கேலி செய்யப்பட்ட ஜென் சி தலைமுறையினர், சட்டசபை நிகழ்ச்சிகளை ஆர்வமாகப் பார்க்கிறார்கள், விவாதம் செய்கிறார்கள். இதுதான் உண்மையான அரசியல் புரட்சி.

2.     தமிழகத்தில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. இந்த அதிகாரப் பகிர்வுதான் உண்மையான ஜனநாயகம்.

3.     திராவிடக் கட்சிகள் மட்டுமே ஆள முடியும் என்ற மாயையை உடைத்துவிட்டார். அதோடு திமுக கூட்டணிக் கட்சிகளை பிரித்துவிட்டார். அதிமுகவை இரண்டாக உடைத்து அரசியல் சாணக்கியராக மாறியிருக்கிறார்.

4.     பட்டியலினத்தவர் மட்டுமின்றி பிராமணர்களையும் அமைச்சராக்கி, சமூக நீதிக்கு புதிய பார்வை கொடுத்திருக்கிறார். 

5.     சிறிய கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக்கிற்கும் அமைச்சரவையில் பங்கு கொடுத்துள்ளார். இனி, தமிழகத்தில் சின்ன கட்சிகளுக்குப் பதவி கொடுக்காமல் யாரும் ஏமாற்ற முடியாது.

6.     அனுபவம் இல்லாதவர்களும் ஆட்சி நடத்த முடியும் எனும் வகையில்  இளைஞர்கள் நிரம்பிய அமைச்சரவையை உருவாக்கி நிர்வாகப் புரட்சி நடத்தியிருக்கிறார்.

7.     பேச்சு முக்கியமல்ல, செயல் மட்டுமே முக்கியம் என்பதைக் காட்டும் வகையில் மேடைப் பேச்சுகளைத் தவிர்த்திருக்கிறார்.

மக்கள் எதிர்பார்த்த நிஜமான மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறார் விஜய். தனது ஆட்சியின் மூலம் ஏழைகள், நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, உண்மையான புரட்சியை உருவாக்குவார் என்றே நம்புவோம்.

Leave a Comment