ஆதவ் அர்ஜுனாவுக்கு விஜய் நோ என்ட்ரி

Image

அண்ணாமலையிடம் தஞ்சம்..?

புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்காத திருமாவளவன் குறித்து விஜய் பேசியதற்கு ஆதவ் அர்ஜுனா கைதட்டிய விவகாரம் இப்போது ஆறு மாத காலம் சஸ்பெண்ட் என்ற நிலைக்குக் கொண்டுபோயிருக்கிறது. விஜய் கட்சியில் சேர்வார் ஆதவ் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஆதவ் அர்ஜுனா வெளியேற்றம் குறித்து பேசிய திருமாவளவன், ‘’ஆதவ் அர்ஜுனா வெளியேற்றம் குறித்து எந்த அழுத்தத்தையும் திமுக எனக்கு கொடுக்கவில்லை. இது பற்றி என்னிடம் யாரும் பேசவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நன்மதிப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இது பற்றி தொடர்ந்து அறிவுறுத்தியும், அவரது சமீபத்திய பேச்சு, தலைமையின் நம்பகத் தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்தது. அதனால்தான் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். இது அவசர தேவையின் அடிப்படையிலான நடவடிக்கை’’ என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் விஜய் கட்சியில் ஆதவ் சேர்வார் என்றும் அவருக்கு இணை பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆதவ் அர்ஜுனாவுக்கு கட்சியில் இடம் இல்லை என்று விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டாராம். விசிகவை உடைத்துவிட்டு ஒரு கூட்டமாக வந்தால் கூட்டணி குறித்துப் பேசலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆகவே, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் இதற்கு எதிர்ப்புக்குரல் எழுமா என்று காத்திருக்கிறார். ஒருசிலரை தூண்டிவிடவும் செய்துள்ளார். வேறு வழியில்லை என்றால் இவர் அண்ணாமலையிடம் ஐக்கியமாவார் என்றே சொல்லப்படுகிறது.

Leave a Comment