மக்களே தயாரா இருங்க
இந்திய அரசியல் வரலாற்றில் முதன்முதலாக பாதிக்கப்பட்ட மக்களை தன் வீட்டுக்கு வரவழைத்து உதவிகள் செய்து ஒரு புதிய சரித்திர சாதனை படைத்திருக்கிறார் நடிகர் விஜய். தேர்தல் நேரத்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், புதிய வகையில் வாக்கு சேகரிப்பார் என்று சொல்லப்படுகிறது.
இதையொட்டி கிண்டலாக வெளியாகியிருக்கும் ஒரு பதிவு செம வைரலாகிறது. விஜய் தேர்தல் நேரத்தில், ‘’அன்பான வாக்காள பெருமக்களே 234 தொகுதிகளிலும் உங்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்க எனக்கும் ஆசை தான்..But நான் வாக்கு சேகரிக்க வரும் பொழுது மிகப்பெரிய கூட்டம் கூடிவிடும் அது பொது மக்களுக்கு பாதிப்பாக இருக்கலாம்…
என் நெஞ்சில் குடியிருக்கும் வாக்காளப் பெருமக்களே ஒவ்வொரு தொகுதி வாக்காளர்களும் எனது பனையூர் முகாம் அலுவலகத்திற்கு அனைவரும் வந்து விடுங்கள் உங்களிடத்தில் நான் இங்கேயே வாக்கு கேட்டுக்கொள்கிறேன் 234 தொகுதி மக்களுக்கும் எந்தெந்த நாளில் வர வேண்டும் என்று எங்களின் புஸ்ஸி அங்கிள் அறிக்கை வெளியிடுவார்.. தேர்தலில் எனக்கு ஓட்டு போட்டு விடுங்கள்… இப்படியே ஸ்ட்ரெயிட்டா கோட்டையில் முதல்வராக அமர்ந்து கொள்கிறேன்
முன்னதாக பதவியேற்பு விழாவிற்கு ஆளுநரை பனையூர் அலுவலகத்திற்கு வந்து எனக்கு பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு உங்களின் சார்பாக கோரிக்கையை வைத்து விடுகிறேன்.. தொகுதிக்கு செல்லாமல் 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றோம் என்று வருங்காலத்தில் தலைமுறைகளுக்கு அறிந்து கொள்ளும் வண்ணம் செயல்பட்டு புதிய சரித்திரம் படைப்போம்.
நண்பா நம்பி. மற்றும் சாரி அவர்களே இவர்களே என்று நான் யார் பேரையும் சொல்ல மாட்டேன்.. எனது கனவு நிறைவேறிட நண்பா நண்பிகளே.. உறுதுணையாக இருங்கள் அதிக வாக்குகளை பெற்றுத் தரும் தொகுதி மக்களுக்கு பனையூர் அலுவலகத்தில் பரிசுத்தொகை சான்றிதழ் வழங்கப்படும் ஒவ்வொருவருக்கும்… இதெல்லாம் தேர்தலுக்குப் பிறகு… இதுதான் நமது கட்சியின் கொள்கை கோட்பாடு.. பிரகடனம் .சாசனம்…’’
இப்படியும் நடக்கலாம்.