ஜிலேபி வானதியை மாட்டிவிட்ட அண்ணாமலை

Image

நிர்மலா சீதாராமன் ஆணவத்துக்கு ஆப்பு.

தமிழகத்தில் கட்சியை வளர்ப்பதற்கு பா.ஜ.க. என்னென்ன முயற்சி செய்தாலும், அது எல்லாமே பேக் ஃபயர் ஆவது வாடிக்கை. அப்படித் தான் கோவை கொடிசியா அரங்கில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் பேசிய ஜிஎஸ்டி வரி விதிப்பு விவகாரம் இந்திய அளவில் வைரலானது.

அவர் நியாயமான விஷயங்களை அவருக்கே உரித்தான தொணியில் பேசியிருந்தார். அதாவது அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பலமுனைகளில் 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம் என வரி விதிக்கப்படுகிறது. இனிப்பு வகைகளுக்கு 5 சதவிகிதம், கார வகைகளுக்கு 18 சதவிகிதம், பன்னில் கிரீம் தடவினால் 18 சதவிகிதம் என பலவிதமான வரி விதிக்கப்படுகிறது. ஆனால், பன்னுக்கு வரியில்லை. அதில் கிரீம் தடவினால் வரி விதிக்கப்படுவது நுகர்வோர் மத்தியில் கேட்கப்படுகிறது’ என்று பேசியதும் அரங்கத்தில் சிரிப்பொலியால் அதிர்ந்தது.

இதைக் கண்டு ஆத்திரமடைந்த நிர்மலா சீதாராமன் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். எனவே, ஹோட்டல் அதிபரை நிர்மலா சீதாராமன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்தார்கள். இந்த நிகழ்வை அண்ணாமலையின் வார் டீம் வீடியோவாக வெளியிடவே, ஒட்டுமொத்த தமிழக மக்களும் பொங்கியெழுந்துவிட்டனர்.

அடுத்த தலைவராகத் திட்டமிடும் வானதி சீனிவாசனை அண்ணாமலை டீம் திட்டமிட்டு மாட்டி வைத்ததாகவே பா.ஜ.க.வினர் கருதுகிறார்கள். இந்த வகையிலே தமிழிசை செளந்தரராஜனும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரம் சீரியஸாவதை அறிந்த அண்ணாமலை, ’மத்திய நிதி அமைச்சருக்கும், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையேயான, ‘தனிப்பட்ட உரையாடலை பொதுவெளியில் பகிர்ந்து கொண்ட பாஜகவினரின் செயலுக்காக, நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அன்னபூர்ணா ஹோட்டல்களின் உரிமையாளர் சீனிவாசனுடன் நான் பேசினேன். இந்த எதிர்பாராத சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தேன். இந்த விவகாரத்தை உரிய மரியாதையுடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பல்வேறு மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் ஆளான சீனிவாசனை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கட்டாயப்படுத்தி வரவழைத்ததாக செய்திகள் பரவின. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வானதி, ‘நான் ஜிலேபி சாப்பிடவில்லை, கட்டாயப்படுத்தி அவரை வரவழைக்கவில்லை. அவரே மன்னிப்பு கேட்டார் என்று கூறினார்.

ஆனாலும் மக்கள் நம்புவதாக இல்லை. இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இந்த செயலுக்கு கடுமையான கண்டனம் வெளியிட்டார். இதையடுத்து, நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைக்கிறார்கள்.

இதற்காக தமிழக காங்கிரஸ் கட்சி ஒரு போராட்டமே நடத்தப்போவதாக அறிவிப்பு செய்திருக்கிறது. இத்தனைக்குப் பிறகும் கொங்கு பகுதியில் ஆளுமை செய்துவரும் எடப்பாடி பழனிசாமி, வேலுசாமி ஆகியோர் எந்த கருத்தும் கூறாமல் அமைதி காப்பது தான் வேடிக்கை.

.

Leave a Comment