சாலை ஆய்வுக்கு வீடியோ, போட்டோ ஆதாரம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 221

சாலைகள் தொடர்ந்து போடப்பட்டு வந்தாலும் அதன் மூலம் மக்களுக்கு முழுமையான பயன் கிடைக்கவில்லை என்பதாலே, ஐந்தடுக்குப் பரிசோதனை மேற்கொள்வதற்கு உத்தரவிட்டார். சாலைகள் அமைத்த பிறகு அதனை குறை சொல்வதால் எந்த பயனும் இருக்காது என்பதாலே, சாலை போடப்படும் நேரத்திலேயே அதன் தரத்தைக் கன்காணிக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார்.

சென்னை மாநகராட்சியில் முதன்முறையாக நடைமுறைக்கு வந்த இந்த ஐந்தடுக்குப் பரிசோதனை கண்காணிப்பு என்பது சைதை துரைசாமியின் தனித்தன்மையைக் காட்டுவதாக அமைந்தது. இதுதவிர, சாலை தரமுடன் அமைக்கப்படுவதை உறுதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட ஜூனியர் இன்ஜினியர், அந்த இடத்தில் சாலையை கண்காணிக்க வேண்டும். மேலும் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தால் நியமிக்கப்பட்ட ஸ்டேட் குவாலிட்டி மானிட்டர் என்ற மூன்றாம் நபர் மூலம் தரக்கட்டுப்பாட்டு ஆய்வும் நடத்தவேண்டும் என்று புதிய கட்டுப்பாடுகளை விதித்தார்.

இதுபோன்ற பல கட்டுப்பாடு நடவடிக்கைகள் மாநகராட்சியில் இருந்துவந்தாலும் அதிகாரிகள் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. ஆய்வுகள் நடத்தாமலே, குறிப்பிட்ட இடத்துக்குப் போகாமலே அந்த பணிகள் நடந்துமுடிந்ததாக கணக்கு எழுதிவிடுவார்கள். இதுபோன்ற குளறுபடிகள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக புதிய உத்தரவு ஒன்றை நடைமுறைக்குக் கொண்டுவந்தார் மேயர் சைதை துரைசாமி.

அதாவது, சாலைப் பணிகளை கண்காணிக்கும் அதிகாரிகள் அந்த நிகழ்வை வீடியோவாகவும் புகைப்படங்கள் எடுத்தும் ஆவணப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இது அதிகாரிகள் மட்டத்தில் புயல் கிளப்பியது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment