புருஷனா இருப்பது ரொம்பவே குஷ்டமப்பா…

Image
  • பொண்டாட்டி ஜாக்கிரதை

எரிமலை எப்படி வெடிக்கும்னே தெரியாது…. நாமதான் உஷரா நீரை ஊற்றி குளிர வச்சிட்டே இருக்கனும்…பாஸ். எவ்ளோ நீரை ஊத்தினாலும் எரிமலைய அணைக்க முடியுமா?? அப்படித்தான் பொண்டாட்டியை டீல் பண்றது.

இப்படிதான் ஒரு அதிகாலைப் பொழுது கணவன் மனைவியை எழுப்பிக் கேட்டான்.

“டியர் யோகா பண்ணப் போகலாம்னு நினைக்கிறேன்… நீயும் வர்றியா ? “

கணவனை வித்தியாசமாகப் பார்த்த அந்த மனைவி “ஓ…. அப்படின்னா நான் குண்டா இருக்கேன், உடம்பைக் குறைன்னு சொல்றீங்களா ?” என்றாள்.

“அதுக்கில்லம்மா யோகா செய்றது ஹெல்த்துக்கு நல்லது” .

’’அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா”

’’இல்லை இல்லை, அசதியா இருந்தா நீ வர வேணாம் விடு “

“அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க…?”

’’ஐயோ ! இல்லை ஏன் எல்லாத்தையும் தப்பாகவே புரிஞ்சுக்கிறே…”

’’அப்போ இவ்வளவு நாளாக உங்களைப் புரிஞ்சுக்காமத்தான் இருந்தேனா…?”

’’இல்ல… அப்படி நான் சொல்லல…”

’’அப்படித் தான் சொன்னீங்க, அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?’’

’’தயவுசெய்து விடு காலங்காத்தால ஏன் சண்டை…’’

’’ஆமாங்க நான் சண்டைக்காரி தான்…”

’’ஓகே நானும் போகலை… போதுமா?”

’’உங்களுக்கு போக அலுப்பு என்னை வம்பா இழுத்து டென்ஷன் பண்றீங்க…”

’’சரி நீ தூங்கு, நான் தனியா போய்க்கிறேன் சந்தோசமா?’’

’’அதானே உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் என்ஜாய் பண்ணனும் , அதுக்குத் தானே இவ்வளவையும் பேசினீங்க…’’

வெறுத்துப் போன கணவனுக்கு எவ்வளவு யோசித்தும் தான் என்ன தவறு செய்தேன் என்று விளங்கவே இல்லை. வேறு வழியில்லாமல் அழுதபடி அப்படியே படுத்து உறங்கிவிட்டான். பிரேக் பிடிக்காத வண்டி எந்த திசை நோக்கி போவும்னே தெரியாது பாஸ்.