Wife funny ஜோக்ஸ்
மனைவி: ஏங்க உங்களுக்கெல்லாம் நாகரீகமே தெரியாதா..? நான் ஒரு மணி நேரமா பேசுறேன் கொட்டாவி விட்டுக்கிட்டே இருக்கீங்க…
கணவன்: லூசாடி நீ… உன்கிட்ட ஏதாவது சொல்லனும்னு வாய தொறந்தா, எங்க நீ பேச விடுற…
………………
மகன் : என்னம்மா உன்கிட்டே கதை கேட்டா அப்பா வரட்டும்னு சொல்றே…
அம்மா : இன்னைக்கு லேட்டா வர்றாரில்லே… காரணம் கேட்போம். எத்தனை கதை சொல்வாரு தெரியுமா?
…………
கணவன் : வரதட்சனை வாங்கிட்டு உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டது தப்புன்னு எனக்கு ரொம்பவும் வருத்தமா இருக்குது…
மனைவி : அதுக்காக…
கணவன் : உன் தங்கச்சியை வரதட்சனை வாங்காம கட்டிக்கிடலாம்னு பார்க்குறேன்.
…………………..
மனைவி : எதுக்குங்க வேலைக்காரி பாத்ரூம்ல குளிக்கும்போது எட்டிப் பார்த்தீங்க…
கணவன் : அவ, தினமும் என் சோப்பைத்தான் போடுறாளான்னு ஒரு சந்தேகம், அதுக்குத்தான்.
…………….
மனைவி : நேத்துத்தான் குடிக்க மாட்டேன்னு சொன்னீங்க, இன்னைக்கு குடிச்சுட்டு வந்திருக்கீங்களே…
கணவன் : நீ எண்ணெய் ஊத்தி வைக்க பாட்டில் இல்லையேன்னு நேத்து வருத்தப்பட்டியே செல்லம்.
…………..
மனைவி : என்னங்க, கோபமா போற மாதிரி தெரியுது..
கணவன் : ஆமா தற்கொலை செஞ்சுக்கப் போறேன்.
மனைவி : சரி, திரும்பி வரும்போது அரைகிலோ வெங்காயம் வாங்கிட்டு வாங்க.












