கற்பனைக்கும் எட்டாத ஆலோசனைகள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 397

பெருநகர சென்னை மேயராக சைதை துரைசாமி ஐந்து ஆண்டுகளில் செய்துமுடித்த பணிகள் கற்பனைக்கும் அப்பாற்பட்டவை. பொதுவாக அதிகாரிகள் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்வார்கள். அரசியல்வாதி என்றால் சுமார் 10 மணி நேரம் மக்கள் பணியில் ஈடுபடுவார்கள். மற்ற நேரங்களை தங்கள் சொந்தக் குடும்பத்துக்கும் தன்னுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

ஆனால், மேயர் சைதை துரைசாமி மேயராகப் பதவி ஏற்றதும் தன்னுடைய முழு நேரத்தையும் சென்னையின் வளர்ச்சிக்குச் செலவிட்டார். தூங்குவதற்கு என 5 மணி நேரத்தை மட்டும் ஒதுக்கிவிட்டு மீதமுள்ள 19 மணி நேரத்தையும் மேயர் பதவிக்காகவும், சென்னை மாநகர வளர்ச்சிக்காகவும் உழைத்தார். அதனாலே மேயர் சைதை துரைசாமியால் யாரும் எதிர்பார்க்காத அளவுக்குப் பணிகள் செய்ய முடிந்தது.  

மாநகராட்சி அதிகாரிகளுடன் நடைபெறும் வாராந்திரக் கூட்டங்கள் மற்றும் துறைசார்ந்த ஆலோசனைக் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்துக் கூட்டங்களிலும் மாநகராட்சியின் வளர்ச்சிக்காகவும் மாநகராட்சியில் நடைமுறைப்படும் திட்டங்களில் செய்யவேண்டிய சீரமைப்புகள் பற்றியும், புதிய புதிய சிந்தனைகளைப் புகுத்தி, எவரும் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு ஆலோசனைகளை வழங்கினார் மேயர் சைதை துரைசாமி. அவரது 5 ஆண்டு காலத்தில் வழங்கிய ஆலோசனைகளின் எண்ணிக்கை 35,263 ஆகும்.

5 ஆண்டு காலத்தில் 35,263 ஆலோசனைகள் வழங்கிய மேயர் உலகில் வேறு எங்கும் இல்லை என்று உறுதியாகக் கூறமுடியும். இந்த தகவலில் கற்பனை துளியும் இல்லை. இப்போதும் மாநகராட்சி கோப்புகளில் மேயர் சைதை துரைசாமி ஆலோசனைகள் வழங்கியதற்கான ஆதாரத்தை யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். அவருக்கு முன்னேயும் பின்னேயும் இத்தனை ஆயிரங்களில் எந்த மேயரும் ஆலோசனை வழங்கியதே இல்லை.

எல்லா நேரமும் மக்களின் முன்னேற்றம் பற்றியும் சென்னை மாநகர வளர்ச்சி பற்றியும் மட்டுமே மேயர் சைதை துரைசாமி சிந்தித்துக்கொண்டு இருந்த காரணத்தால் மட்டுமே ஐந்து ஆண்டுகளில் 35,263 ஆலோசனைகள் தெரிவித்து வரலாற்று சாதனைகள் புரிய முடிந்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment