என்ன செய்தார் சைதை துரைசாமி – 368
கூவம் நதியை சீரமைப்பதற்கு மேயர் சைதை துரைசாமியின் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட அன்றைய முதல்வர் ஜெயலலிதா, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு உத்தரவிட்டார். திட்டத்துக்குப் போதிய நிதியும் ஒதுக்கப்பட்டன. இது குறித்து சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி விரிவாகப் பேசினார்.
ஒவ்வொரு துறையின் மூலமும் எப்படிப்பட்ட பணிகள் செய்யப்பட உள்ளன என்று மேயர் சைதை துரைசாமி விளக்கினார். மன்றத்தில் மேயர் சைதை துரைசாமி பேசுகையில், ‘’நகராட்சி நிர்வாகத் துறை மூலம் 5 ஒப்பப் பணிகள் மொத்த தொகை ரூ.31.47 கோடியில் திருவேற்காடு பகுதியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் திடக் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கூவம் நதிக்கரையின் இரு எல்லைகளிலும் ஆக்கிரமிப்பு இல்லாத பகுதிகளில் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சிறுவர் பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சித் துறை மூலம் 7 ஒப்பப் பணிகள் – மொத்தத் தொகை ரூ.3.67 கோடியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் திடக்கழிவு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கூவம் நதியின் இரு எல்லைகளிலும் ஆக்கிரமிப்பு இல்லாத பகுதிகளில் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் 15 ஒப்பப் பணிகள் ரூ.186.19 கோடியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சென்னை குடிநீர் எல்லைக்குள் சேத்துப்பட்டு மன்றோ பாலம் வரை பாதாள கழிவு நீர் குழாய்கள் அமைக்கும் பணி, கழிவுநீர் சுத்திகரிப்பு பணி ஆகியவை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் சேத்துப்பட்டு மன்றோ பாலம் நேப்பியர் பாலம் வரை கடலோர ஒழுங்கு முறை மண்டலத்தின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது…’’ என்று அறிவித்தார்.
இதையடுத்து கூவம் நதிக்கரை மக்களை என்ன செய்வது என்ற கேள்விக்கு விடை அளித்தார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.