• Home
  • அரசியல்
  • உதயநிதியின் ரேஸ் காலை மட்டுமே ஓசி. அப்புறம்..?

உதயநிதியின் ரேஸ் காலை மட்டுமே ஓசி. அப்புறம்..?

Image

நடிகை ரேஸில் கலந்துகொள்வாரா..?

சென்னையில் முதன்முதலாக நடைபெற இருக்கும் ஃபார்முலா கார் ரேஸ் பந்தயத்தின் ஒரு செஷன் மட்டும் இலவசமாக பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த இந்தபோட்டி ஒத்தி வைக்கப்பட்டு இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளது.

போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் கார் பந்தயம் நடத்தப்படும்… சனிக்கிழமை காலை நடைபெறும். இந்த பந்தயத்தை 8000 பேர் இலவசமாக பார்க்கலாம் என்றும் மாலை மற்றும் இரவு நேரத்தில் அடுத்த கட்ட பந்தயம் நடக்கும். ஆனால், மக்களுக்கு எந்த வ்கையிலும் தொந்தரவு இருக்காது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இதற்காக இன்று தலைமைச் செயலாளர் தலைமையில் காவல்துறை , தீயணைப்புத் துறை என அனைத்து துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த விழா நடக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தொடங்கி சவுக்கு சங்கர் வரையிலும் போராடிப் பார்த்தார்கள். ஆனாலும், பந்தயம் உறுதியாகியிருக்கிறது.

இந்த பந்தயத்தில் ‘அந்த’ நடிகையும் கலந்து கொண்டு கார் ஓட்டுவாரா என்பதைப் பார்க்க மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். மாலை மற்றும் இரவு நேரத்தில் கார் ரேஸ் பார்க்க டிக்கெட் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாம்.

Leave a Comment