சூப்பரு திராவிட மாடல்
இந்து பண்டிகைகளுக்கு மட்டும் மக்களுக்கு வாழ்த்து சொல்லாமல் அமைதி காக்கும் ஸ்டாலின், உதயநிதி போன்றோர் கிறிஸ்துமஸ் தொடங்கி மொகரம் வரை மற்ற பண்டிகைகளுக்கு வாய் நிறைய வாழ்த்து சொல்வார்கள். இந்த நிலையில் இன்று அவரது ஐ.டி. விங் புதிய ஆட்கள் சேர்ப்பு நிகழ்வில் அவர்களுக்கு மட்டும் தீபாவளி வாழ்த்து கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
இன்று உதயநிதி, ‘’கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, தலைமைக்கழகத்துக்கு 100 பேச்சாளர்களை உருவாக்கித்தர வேண்டும் என்கிற வகையில், உன் உயிரினும் மேலான’ என்ற பேச்சுப் போட்டியை நடத்த உத்தரவிட்டார்கள். மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க 17 ஆயிரம் பேர் விண்ணப்பித்த நிலையில், அதிலிருந்து நடுவர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 913 பேர் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர்.
இவர்களில் இருந்து இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ள 182 போட்டியாளர்களை, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா – நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நினைவிடங்களுக்கு இன்று நம் ஏற்பாட்டில் அழைத்துச் சென்றோம். அவர்களுடன் இணைந்து அண்ணா – கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினோம் மேலும் அங்குள்ள, கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட மாணவச் செல்வங்கள் அவர்களின் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து மகிழ்ந்தனர்…’ என்று கூறியிருக்கிறார்.
இது ஒரு வகையில் தி.மு.க. ஐ.டி விங்கிற்கு ஆள் சேர்க்கும் முயற்சி என்கிறார்கள். மாதாமாதம் இவர்களுக்கு தொகை வழங்கப்பட்டு, அவர்கள் போடும் பதிவுகளுக்கு ஏற்ப தொகை வழங்கப்பட இருக்கிறதாம். இந்நிலையில் இந்த புதிய தி.முக. உறுப்பினர்களிடம் பேசிய உதயநிதி, ‘நம்பிக்கையுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடுபவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பேசியிருக்கிறார்.
தி.மு.க.வினருக்குச் சொல்லும் தீபாவளி வாழ்த்தை மக்களுக்குச் சொன்னால் என்ன என்பது தான் கேள்வி.