• Home
  • தமிழ் லீடர்
  • விஜய் கட்சிக் கொடிக்கு உதயநிதி சிரிப்பு. கலக்கத்தில் சீமான்

விஜய் கட்சிக் கொடிக்கு உதயநிதி சிரிப்பு. கலக்கத்தில் சீமான்

Image

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று கொடியை அறிமுகம் செய்து வைத்தார். இதில் சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்துடன் இரண்டு போர் யானைகளுக்கு இடையே வாகை மலர் இடம் பெற்றுள்ளது. வாகை மலரை சுற்றி பச்சை மற்றும் நீள நிறத்தில் திலகமிடப்பட்டுள்ளது.

அதோடு கட்சிக் கொடிக்காக ஒரு கொள்கைப் பாடலும் வெளியிடப்பட்டுள்ளது. இது தான் அந்த பாடல்.

“தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது..
மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது..
சிறுசும் பெருசும் ரசிக்குது..
சிங்க பெண்கள் சிரிக்குது..
மக்களோட தொப்புள் கொடியில் மொளச்ச கொடியும் பறக்குது..
மனசுல மக்களை வைக்கும் தலைவன் வரும் நேரமிது..
மக்களும் அவன மனசில் வச்சு ஆடிப்பாடி கூப்பிடுது..
சிகரம் கிடைச்ச பின்னும் இறங்கி வந்து சேவை செஞ்சு..
நீங்க கொடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலம் இது..
தமிழா தமிழா நம்ம வாழ போறமே..
ஒரு கரை இல்லாத கைய புடிச்சு போகப் போறோமே..
தமிழன் கொடிடி தலைவன் கொடி.. தர்மக்கொடி தரையின் கொடி.. வீரக் கொடி விஜயக் கொடி.. ஆதி கொடிய காக்கும் கொடி..
ரத்த சிவப்பில் நிறமெடுத்து ரெட்டை யானை பலம் கொடுத்தோம்..
நரம்பில் ஓடும் தமிழ் உணர்வ உருவி உருக் கொடுத்தோம்..
மஞ்சள் எடுத்து அலங்கரிச்சோம்..
பச்சை நீல திலகம் வச்சோம்..
பரிதவிக்கும் மக்கள் பக்கம் சிங்கம் வர்ரத பறையடிச்சோம்..
தூரம் நின்னு பாக்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது..
தோளில் வந்து கையை போடும் தலைவன் கொடி ஏறுது..
அரசரைக் கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி..
அன்னைக்கே சொன்னோமே இது ஆளப்போற தமிழன் கொடி..”

இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத தமன் இசையமைத்திருக்கிறார். இந்த பாடலில் பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரைக் காட்டியிருக்கிறார். அதேபோல், அதிமுகவினர் காட்டும் இரட்டை விரல் வெற்றிச்சின்னம் திமுகவின் விரல்கள் சேராமல் இருக்கும் உதயசூரியன் சின்னத்தையும் காட்டியிருக்கிறார்.

இந்த நிலையில் விஜய் கொடி அறிமுகம் செய்த கொஞ்ச நேரத்திலே, அவர் உதயநிதி போலவே கொடியை ஏந்தியிருக்கிறார் என்று தி.மு.க. ஐடி விங் ஆட்கள் விஜய்யை டிரோல் செய்தார்கள். இந்த நிலையில் உதயநிதியிடம் விஜய் கொடி குறித்தும் பாடல் குறித்தும் கேட்கப்பட்டது.

அதற்கு உதயநிதி, விஜய் கொடி அறிமுகம் செய்திருப்பதற்கு வாழ்த்துக்கள் என்று சிரித்திருக்கிறார். இதன் அர்த்தம் விஜய்யை கிண்டல் செய்வது தான் என்கிறார்கள்.  அதேநேரம் நான் இன்னமும் அந்த பாடலை பார்க்கவில்லை என்று தெரிவித்து நழுவி விட்டார்.

இப்போது நாம் தமிழர் சீமான் மிகப்பெரும் கலக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரது கட்சியில் இருக்கும் சிறுவர், சிறுவர்கள், மாணவர்கள் எல்லோரும் விஜய் பக்கம் போய்விடுவார்கள் என்ற அச்சத்தில் இருக்கிறார். கூட்டணி குறித்து இதுவரை பல முறை பேசியும் விஜய் பதில் சொல்லவே இல்லை என்றும் கலவரத்தில் இருக்கிறாராம்.

Leave a Comment