வான்கோழி பவுலிங் ஸ்னோ பவுலிங்

Image

தர்க்கி பவுலிங் கத்துக்கோங்க



பந்தயம் என்றாலே பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. இன்று வணிக வளாகங்களில் விளையாடப்படும் ஸ்னோ பவுலிங்தான் அன்று தர்க்கி பவுலிங். ஆம், இது அமெரிக்கா மற்றும் கனடாவில் நடைபெறும் பிரபலமான விளையாட்டு ஆகும். இந்த இரு நாடுகள் தவிர, இன்னும் பிற நாடுகளிலும் இந்த தர்க்கி பவுலிங் விளையாடப்படுகிறது.

குறிப்பிட்ட தூரத்தில் 10 டப்பாக்களை நிறுத்தியிருப்பார்கள். அவற்றை, ஸ்னோ பவுலிங் போன்று பந்து ஒன்றின் மூலம் வீழ்த்த வேண்டும். ஒரேநேரத்தில், பத்து டப்பாக்களையும் வீழ்த்துபவரே வெற்றியாளர் ஆவார். அதாவது, இந்த விளையாட்டின்போது அந்த 10 டப்பாக்களை வீழ்த்த ஒரு பெரிய பந்து கொடுக்கப்படும். அந்த பெரிய பந்தில், இரண்டு துளை போன்ற அமைப்பு இருக்கும். அந்த துளைகளில் விரல்களை விட்டு, பந்தை உருட்டிவிடுவர். பந்து எதிரே நிறுத்தியிருக்கும், 10 டப்பாக்களை வீழ்த்தும் அல்லது அதில் பாதியளவாவது வீழ்த்தும்.
இப்படி விளையாடும் முறைக்கே துருக்கி பவுலிங் என்று சொல்லப்படுகிறது.

இதை மேற்கண்ட நாடுகளில் பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி பணம் சம்பாதிக்கும் வகையிலும் விளையாடுகின்றனர். இதற்காக தனி மைதானங்களோ, இடங்களோ தேவையில்லை. பெரிய வணிக நிறுவனங்களே இத்தகைய விளையாட்டை விளையாட அங்கீகரிக்கின்றன. வணிக நிறுவனத்துக்கு வரும் நுகர்வோர்கள், பொருட்களை வாங்குவதுடன், அப்படியே இந்த விளையாட்டை விளையாடிவிட்டும் செல்கின்றனர். இதனால், அவர்களுக்கு பணமும், மகிழ்ச்சியும் கிடைப்பதாகத் தெரிவிக்கின்றனர், வணிக நிறுவன முதலாளிகள்.

இந்த தர்க்கி பவுலிங் என்பதன் ஆரம்பம் நிஜமான வான்கோழி பவுலிங்தான். ஆம், பந்துக்குப் பதிலாக வான்கோழி இறைச்சி பந்து போன்று மாற்றி, வீசப்படுகிறது. ஆம், வான்கோழி இறைச்சியை குளிரவைத்து, பந்து போல் பயன்படுத்துகின்றனர். 1988ம் ஆண்டு டெரிக் ஜான்சன் என்பவர் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, இந்த வான்கோழி பவுலிங் விளையாட்டைக் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார். மேலாளர் ஒருவர், உறைந்த வான்கோழி இறைச்சியைக் கொண்டு சோடா பாட்டில்களை தற்செயலாக வீழ்த்தியதாக அவர் குறிப்பிடுகிறார். 1995ம் ஆண்டு கிறிஸ்டோபர் மூரின் என்ற நாவலாசிரியர் எழுதி வெளியான, ‘பிளட்ஸக்கிங் ஃபைண்ட்ஸ்: எ லவ் ஸ்டோரி’ என்ற நாவலில், வான்கோழி பவுலிங் பற்றிய விளையாட்டு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க…வான்கோழி பந்துவீச்சு என்பது உயிரினங்களுக்கு செய்யப்படும் அவமரியாதை என்று கூறி அதற்கு எதிராய்ப் போர்க்கொடி தூக்கினர். குறிப்பாக, 2003ம் ஆண்டு மான்செஸ்டர் ஈவினிங் நியூஸ் அரங்கில் நடைபெற இருந்த போட்டிக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

அதேபோல் 2007ம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற இருந்த வான்கோழி பவுலிங் போட்டிக்காகக் கொண்டுவரப்பட்ட வான்கோழி ஒன்றும் மீட்கப்பட்டது. இதன்விளைவாக, உண்மையான உறைந்த வான்கோழிகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் வான்கோழிகள் பயன்படுத்தப்பட்டன.
விளையாட்டுகளில்தான்எத்தனை வகைகள்.

Leave a Comment