டிடிவி தினகரன் படைத்த மெகா சாதனை

Image

அந்த 10 நிமிடங்கள்

தேர்தல் ஆலோசனைக் கூட்டம் என்றால் ஆளும் தி.மு.க.வும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அரங்கத்தில் அடைக்க முடியாத அளவுக்கு ஆட்களை நிரப்பி ஆலோசனை செய்கிறார்கள். நாலைந்து மணி நேரங்கள் தாண்டியும் ஆலோசனை நடக்கிறது. இந்த நிலையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் ஒரு சாதனை படைத்திருக்கறது.

இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் குறித்துப் பேசிய அ.ம.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர், ‘’திடீரென ஆலோசனக் கூட்டம் என்று கூப்பிட்டார்கள். நான் வேகமாக வந்து பார்த்தால் யாருமே இல்லை. அரங்கம் தயாராகவில்லை. என்னவென்று கேட்டபோது அவரது தனியறையில் தான் கூட்டம் என்றார்கள், ரொம்ப நேரம் தினகரன் வரவேயில்லை.

இதை நம்பி வந்த ஏழெட்டு பேரும் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டோம். திடீரென தினகரன் வந்தார். ‘’எல்லாம் நல்லபடியா போய்க்கிட்டு இருக்கு. யாரும் கவலைப்பட வேண்டாம். எல்லாம் நான் பார்த்துக்கிடுறேன். போயிட்டு வாங்க’ அப்படின்னு சொல்லிட்டு எழுந்தரிச்சுப் போயிட்டார். இதுக்கு எதுக்கு கூப்பிடணும். எங்களை எடப்பாடி அணியில் சேர்க்க மாட்டாறாங்க. எங்க வாழ்க்கையே போச்சு’’ என்று புலம்புகிறார்கள்.

மொத்தம் 10 நிமிடத்தில் முடிந்த கூட்டம் என்ற வகையிலும் இதை கின்னஸில் சேர்க்க தினகரன் முயற்சி செய்யலாம்.

Leave a Comment