என்ன செய்தார் சைதை துரைசாமி – 409
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக மாநகர மேயர்களின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட மேயர் சைதை துரைசாமி, அந்த நாட்டில் மாநகராட்சியில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை ஆய்வு செய்து அறிந்துவந்தார். அதன் அடிப்படையில் சென்னையில் கூவம் நதி சீரமைப்புக்குத் திட்டங்கள் வகுத்துக் கொடுத்தார்.
அதேபோன்று அமெரிக்க வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வதற்கு மேயர் சைதை துரைசாமி விரும்பினார். அமெரிக்க நாட்டின் சகோதர நகரங்களின் இயக்கத்தில் அமெரிக்காவின் 400 நகரங்களும், உலக அளவில் 1600 நகரங்களும் இடம்பிடித்துள்ளன. இந்தியாவிலிருந்து 18க்கும் மேற்பட்ட நகரங்கள் அமெரிக்க சகோதர நகரங்களில் ஒன்றாக இணைந்துள்ள நிலையில், சென்னை நகரையும் இணைத்துக்கொள்வதற்கு மேயர் சைதை துரைசாமி முன்வந்தார்.
இதையடுத்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள சான் ஆன்டனியோ மாநகருடன் ஒப்பந்தம் மேற்கொண்டார் மேயர் சைதை துரைசாமி. இதன் மூலம் சென்னை மாநகரமானது, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள சான் ஆன்டனியோ மாநகரம் மட்டுமின்றி டென்வர் மாநகரத்துடனுடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு உருவானது.
இதன் அடிப்படையில் சென்னை மற்றும் அமெரிக்க நகரங்களுக்கு இடையில் உறவு அதிகரித்தல், உலகளாவிய நட்பு வட்டம் உருவாக்குதல், அமைதி, நல்வாழ்வு, பொருளாதார வளர்ச்சி, கலாச்சார பரிமாற்றத்திற்கு பாடுபடுதல் போன்றவை சாத்தியமாகின.
- நாளை பார்க்கலாம்.