என்ன செய்தார் சைதை துரைசாமி – 319
குப்பை அகற்றுவதில் மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட சீர்திருத்தங்கள் எல்லாமே புதுமையானவை. அவரைப் போன்று எந்த ஒரு மேயரும் குப்பைத் தொட்டி, குப்பைக் கூடங்களை இத்தனை தீவிரமாகவும் முழுமையாகவும் ஆய்வுகள் மேற்கொண்டதே இல்லை. மாநகராட்சி அதிகாரிகள், துப்புரவுப் பணி ஆய்வாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என அனைவரிடமும் தொடர்ந்து ஆலோசனைகள் செய்துகொண்டே இருந்தார்.
கூடுதல் குப்பைத் தொட்டிகள் வைத்தல், குப்பைத் தொட்டியை ‘ப’ வடிவ இடத்தில் அமைத்தல், குப்பைத் தொட்டியைக் கழுவுதல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்திய மேயர் சைதை துரைசாமி, துப்புரவுப் பணியாளர்களிடம் போதிய அளவுக்கு சாதனங்கள் இருக்கிறதா என்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்தார். இந்த நேரத்தில் நிறைய ஊழியர்களிடம் தேர்ச்சியான பணி என்பதை அறிந்துகொண்டார்.
துப்புரவுப் பணியில் இருக்கும் நிறைய ஊழியர்கள் அவ்வப்போது வேறு பணிகளுக்குச் சென்றுவிடுவதால் நிறைய புதிய நபர்கள் வருகிறார்கள். குப்பை அகற்றுவது சாதாரண பணி எனும் எண்ணத்தில் யாரும் இவர்களுக்கு எந்தப் பயிற்சியும் கொடுப்பதில்லை. எனவே, ஒவ்வொருவரும் அவரவர்களுக்குத் தெரிந்த வகையில் குப்பை அகற்றுகிறார்கள். போதிய பயிற்சியும் வழிகாட்டுதலும் இல்லாமல் இந்த பணியை மேற்கொள்வதால் முழுமையாக சுத்தமாவதில்லை. ஆகவே, இந்த நடைமுறைகளையும் மாற்றி அமைக்க ஏற்பாடு செய்தார் மேயர் சைதை துரைசாமி.
தேர்ச்சி பெற்ற ஊழியர்கள் மற்றும் நிபுணர்கள் மூலம் ஊழியர்களுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. துப்புரவுச் சாதனங்களைக் கையாள்வதற்கு உரிய வழிமுறைகள் கற்றுத்தரப்பட்டன. இதன் மூலம் ஊழியர்களின் பணி விரைவாகவும், நிறைவாகவும் நடைபெறத் தொடங்கியது. ஊழியர்கள் கூடுதல் செயல்திறனுடன் பணியாற்றத் தொடங்கினார்கள். இதற்காக துப்புரவுப் பணியாளர்கள் மேயர் சைதை துரைசாமிக்கு இன்று வரை நன்றி செலுத்தி வருகிறார்கள்.
- நாளை பார்க்கலாம்.