துர்காவுக்கு திருப்பதி, ஸ்டாலினுக்கு கொடைக்கானல்

Image

திராவிட மாடல் அரசு என்று ஸ்டாலின் சொல்லிக்கொண்டாலும் துர்கா ஸ்டாலின் கோயில் கோயிலாக அலைவதும் ஸ்டாலின் சென்டிமென்ட் பார்த்தே ஒவ்வொரு நடவடிக்கையும் மேற்கொள்கிறார் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த சமாச்சாரம்தான்.

தேர்தல் பரப்புரை முடிந்துவிட்டது. கோடை வெப்பத்தைத் தணிபப்தற்கு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 5 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுக்க முதல்வர் திட்டமிட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதற்காக திங்களன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் குடும்பத்தினருடன் மதுரை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் வருகிறார். அங்கு தனியார் ஹோட்டலில் குடும்பத்தினருடன் மே 3-ம் தேதி வரை 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கிறார்.

கடந்த 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்ததும் குடும்பத்துடன் வந்து தங்கி ஓய்வெடுத்தது குறிப்பிடத்தக்கது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஓய்வெடுக்க வருகிறார். ஓய்வுக்காக வருவதால், கட்சியினர் யாரும் முதல்வரை சந்திக்க அனுமதி இல்லை. மே 3 அல்லது மே 4-ம் தேதி மீண்டும் சென்னை திரும்புவார் என்று திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஸ்டாலின் கொடைக்கானல் செல்வதற்கு சென்டிமென்ட் காரணம் என்கிறார்கள். அதாவது கடந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்குப் பிறகு கொடைக்கானலில் ஓய்வு எடுத்து திரும்பினார். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார். அதேபோன்று இந்த முறையும் வெற்றியை எதிர்பார்த்தே கொடைக்கானலுக்குப் போயிருக்கிறாராம். துர்கா ஸ்டாலினும் கடந்த தேர்தலுக்குப் போலவே இப்போதும் திருப்பதிக்குப் போய் திரும்பியிருக்கிறார். சூப்பர் திராவிட மாடல்.

Leave a Comment