முதுமையை ஜாலியாக்கும் டிப்ஸ்

ஞானகுரு பதில்

கேள்வி : 70 வயது நெருங்கிவிட்டது. எதிர்கால வாழ்க்கையை நினைத்து அச்சமாக இருக்கிறது. எப்படி வாழ்வது என்று வழி காட்டுங்கள்..?

  • என்.ராதாகிருஷ்ணன், வாணியம்பாடி.

ஞானகுரு :

குழந்தைப் பருவம், இளம் பருவம் போன்று முதுமை பருவமும் தினம் தினம் புதுப்புது அனுபவம் தரும். ஆனால், முதுமை என்றதும் மரணத்தை நினைப்பதாலே பலருக்கும் அச்சம் வருகிறது. முதுமையால் யாருக்கும் மரணம் வருவதில்லை, நோயினால் மட்டுமே மரணம் வரும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்த வயது வரையிலும் வாழ்வதே ஒரு சாதனை. எனவே மீதமுள்ள நாட்களிலும் மகிழ்ச்சியுடன் முதுமையை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

முதுமையைக் கொண்டாடுவதற்கு 10 தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். 1. நோயில்லாத உடல் 2. போதிய அளவு பணம் 3. பிரியாத உறவு 4. நல்ல நினைவாற்றல் 5. நட்பு வட்டம் 6. படுத்தவுடன் தூக்கம் 7. ஆசைகள் இல்லாத மனம். 8. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை. 9. பிறரிடம் குற்றம் காணாத மனநிலை. 10. எல்லாவற்றையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்தல். இந்த பத்து தகுதிகள் உள்ளவர் நூறு வயதிலும் இனிமையாக வாழமுடியும்.  மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment