விஜய் மாநாடு எதிரொலி..?
விஜய் மாநாடு நடக்கும் விறுவிறுப்பையொட்டி திடீரென ஒரு அரசியல் வதந்தி பலமாக உருவானது. அதாவது விஜய்காந்தை முதல்வராக்குவதற்கு திருமாவளவன் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியோர் இணைந்து செயல்பட்டது போலவே இப்போது விஜய்யை முதல்வராக்கும் வகையில் மீண்டும் மக்கள் நலக் கூட்டணி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
இந்த நிலையில் திருமாவளவன் ஏற்கெனவே மதுவிலக்கு சண்டையில் இருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியினர் சாம்சங் போராட்டத்தில் கடும் ஆவேசம் காட்டினார்கள். ஆகவே, இவர்களை எப்படியாவது உடைத்துவிட வாய்ப்பு இருக்கிறது என்றே எடப்பாடி பழனிசாமியும் ஆர்வம் காட்டிவந்தார். விஜய் மாநாட்டுக்கு திருமாவளவன் வாழ்த்து கூறியதும் இந்த வதந்தி மேலும் ஸ்பீடாக பரவத் தொடங்கியது.
இதையடுத்தே கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் திருமாவளவன் சரண்டர் ஆகி பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களான மார்க்சிஸ்ட் செயலர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ. மாநில செயலளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சந்தித்து பேசினார்.
செய்தியாளர்களிடம், ‘’சாம்சங் தொழிலாளர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி தெரிவித்தோம். மேலும், தொழிலாளர்கள் மீதான நீதிமன்ற வழக்குகளை ரத்து செய்யக் கோரினோம்’’ என்று கூறினார்கள். ஆனால், உண்மையில் கூட்டணி உடைந்துவிடக் கூடாது என்ற அச்சத்தினாலே சந்தித்து சரண்டர் ஆனதாக சொல்லப்படுகிறது.
அதுசரி, பிரிஞ்சு நின்னா எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும்தானே லாபம்