• Home
  • அழகு
  • வாவ் பியூட்டிக்கு மூன்று கட்டளைகள்

வாவ் பியூட்டிக்கு மூன்று கட்டளைகள்

Image

சிம்பிள் டிப்ஸ்

கடையில் விற்பனையாகும் காஸ்ட்லி க்ரீம்களில் மட்டுமே அழகு இருப்பதாக பெண்கள் நினைக்கிறார்கள். அதேபோல், அழகுக்கு  முகத்தை மட்டும் பராமரித்தாலே போதும்  என்றும் நினைக்கிறார்கள். இந்த இரண்டும்  மிக தவறான எண்ணம். தலைமுடி முதல் கால் நகம் வரை பராமரிப்பதற்கு மூன்று விஷயங்கள் முக்கியம்.

  1. ஆரோக்கியம்:

    நல்ல சத்துள்ள உணவு. கீரை, பச்சை காய்கறிகள், பழங்கள் இவற்றினால் நம் ஆரோக்கியம் சிறப்படையும். அளவான உணவு தேவையான உறக்கம் என்று ஒரு சீரான நிலை இருந்தால் நம் ஆரோக்கியம் நமக்கு அழகை பெற்றுத் தரும். இதற்காக உணவு வழக்கங்களை சற்றே மாற்றி கொண்டால் போதும். கொழுப்பு சத்துமிக்க உணவுகளை தவிர்த்து நார்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். பணமும் மிச்சம். பலனும் பெருகும்.

    2. சுத்தம்:
    சுத்தம் சோறு மட்டும் போடாது. நல்ல அழகையும் போடும். மஞ்சள் நல்லெண்ணை சந்தனம், கடலைமாவு பயத்தமாவு, பால் ஏடு, மருதாணி, செம்பருத்தி, நாமக்கட்டி, தேன், சிலகீரை வகைகள் எல்லாம் அழகை பெற நம் பெண்கள் தொன்று தொட்டு பயன்படுத்தி வருபவை.
    இரு வேளைகளிலும் குளிர்ந்த நீரில் குளிப்பது, கூந்தலை சுத்தமாக வைத்துக் கொள்வது, ஆடைகளை நன்கு தேய்த்து அணிவது, கைகால் நகங்களை சரியாக பாராமரிப்பது போன்றவை, சுத்தத்தை அதிகரித்து அழகை மேம்படுத்தும்.

    3. உடற்பயிற்சி:
    பனிக் காலத்தில் தினமும் உடற்பயிற்சி செய்வது பெண்களுக்கு மிகவும் நல்லது. உடற்பயிற்சி முலம் ரத்த ஓட்டம் அதிகமாகும். மேலும் உடலின் தட்ப வெப்ப நிலையும் பராமரிக்கபடும். முறையான உடற்பயிற்சிகளை செய்து, உடல் நன்றாக வியர்த்து விட்டால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி அழகும் கிடைக்கும். உடற்பயிற்சி செய்வதன் முலம் சுரபிகள் ஓரளவு சுறுசுறுபடையும். அதன் முலம் சருமத்திற்கு ஈரத் தன்மையும், எண்ணைத் தன்மையும் கிடைக்கும். இதனால் அழகும் பாதுகாக்கபடும்.  

தினமும், ஒரு பத்து நிமிடம் உடற்பயிற்சி செய்வதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து நாள் முழுவதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்க முடியும். மாவு அரைத்தல், பெருக்கி துடைத்தல், துணி தேய்த்தல் போன்ற வேலைகளை நாம் சுறுசுறுப்பாக செய்ய உடற்பயிற்சி அவசியம் தேவை.
இந்த பனிக்காலத்தில் மூன்றையும் கடைப்பிடித்துப் பாருங்கள். வாவ், பியூட்டி என்று பெண்களே பொறாமைப்படுவார்கள்.

Leave a Comment