வயநாட்டில் ராகுல் காந்தி சோகம்
வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், இன்னமும் பாதியளவுகூட முடியவில்லை. வானிலை மோசமாக இருக்கிறது, நிலைமை சரியில்லை என்று மாநில அரசு தடுத்ததை பொருட்படுத்தாமல் வயநாட்டு மக்களுக்கு ஆறுதல் சொல்ல பிரியங்காவுடன் வந்திருக்கிறார் ராகுல் காந்தி.
போக்குவரத்துக்கு கொஞ்சமும் பாதுகாப்பு இல்லாத பாதையிலும் பயணித்து, முகாம்களை தங்கியிருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். மீட்புப் பணியில் ஈடுபடும் அத்தனை பேருக்கும் நன்றி கூறியிருக்கும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்த நேரத்தில் நெஞ்சைத் தொடும் வகையில் பேசியிருக்கிறார்.
’’என் தந்தை இறந்தபோது எவ்வளவு துக்கமடைந்தேனோ அதைவிட கொடுத்துயர் இது.. நானாவது தந்தையை மட்டும் தான் இழந்தேன்.. இம்மக்கள் வீடு வாசல் சொந்தம் பந்தம் கிராமத்தையே இழந்து நிற்கிறார்கள்..’’ என்று பேசியிருக்கிறார்.
தன்னுடைய உயிரையும் பணையம் வைத்து மக்கள் உயிருடன் இறந்துபோன இடங்களைப் பார்வையிட்டு கண்கள் கலங்கியிருக்கிறார் ராகுல். இத்தனை உணர்ச்சிகரமாக நிற்கும் ராகுல் காந்தியை, ‘தேர்தல் ஆதாயத்துக்காக வந்திருக்கிறார், இத்தனை கேமராமேன்களுடன் வந்திருக்கிறார்’ என்றெல்லாம் பா.ஜ.க.வினர் தாக்கிவருகிறார்கள்.
இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை இனி உயிருடன் மீட்க வாய்ப்பில்லை. தப்பி பிழைத்தவர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டுவிட்டனர் என்று கேரள அரசு அறிவிப்பு செய்திருக்கிறது. காணாமல் போனவர்களை கணக்கிடும் பணி நடைபெறுகிறது.